புதுடில்லி : தங்களுடைய பணியிடமாற்றத்தை மறுபரிசீலனை செய்யக் கோரி மூன்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் அளித்த கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு, ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.
இதையடுத்து மூன்று பேரும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான, ‘கொலீஜியம்’ சில உயர் நீதிமன்ற நீதிபதிகளை பணியிடமாற்றம் செய்து சமீபத்தில் பரிந்துரை செய்திருந்தது.
இதன்படி, அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி தினேஷ் குமார் சிங், கேரளாவுக்கு மாற்றப்பட்டார்.
பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்ற நீதிபதி மனோஜ் பஜால், அலகாபாதுக்கும், புதுடில்லி உயர் நீதிமன்ற நீதிபதி கவுரங்க் காந்த், கோல்கட்டாவுக்கும் மாற்றப்பட்டனர். தங்களை அருகில் உள்ள மாநிலங்களுக்கு மாற்றும்படி, இந்த மூவரும் மனு கொடுத்திருந்தனர்.
இது தொடர்பாக ஆலோசனைகள் நடத்திய பின், இந்த இடமாற்றத்தை உறுதி செய்வதாக, உச்ச நீதிமன்ற கொலீஜியம் சமீபத்தில் அறிவித்தது.
இதையடுத்து, இந்த மூவரும் பணியிட மாற்றம் செய்யப்படுவதாக, மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மெஹ்வால் நேற்று அறிவித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement