அமைச்சர் பொன்முடி திக் திக்… 13 மணி நேரம் முடிஞ்சுது… விசாரணைக்கு அழைத்து சென்ற அமலாக்கத்துறை!

அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அமைச்சர் பொன்முடி என ஒரே நாளில் இருவர் குறித்த பரபரப்பு செய்திகள் வெளியாகியுள்ளன. பைபாஸ் அறுவை சிகிச்சை முடிந்து சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அமைச்சர் செந்தில் பாலாஜி தங்கியிருந்தார். இவர் உடல்நிலை தேறியுள்ள நிலையில் டிஸ்சார்ஜ் செய்ய மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்தது.

அமலாக்கத்துறை ரெய்டு

இதையடுத்து வீட்டிற்கு திரும்ப முடிவு செய்தார். ஆனால் அமலாக்கத்துறை கைது செய்துள்ள நிலையில், வீட்டிற்கு செல்ல முடியாது. ஏற்கனவே புழல் சிறையில் கைதி எண் வழங்கப்பட்டிருக்கிறது. அதன் அடிப்படையில் செந்தில் பாலாஜியை அங்கு அழைத்து செல்ல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சிக்கிய அமைச்சர் பொன்முடி

மறுபுறம் இன்று காலை முதல் அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான சென்னை மற்றும் விழுப்புரத்தில் உள்ள வீடு, மகன் கவுதம சிகாமணி வீடு மற்றும் இவர்களுக்கு சொந்தமான கல்வி நிறுவனங்களில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியது.

வழக்கின் பின்னணி

இதன் பின்னணி குறித்து விசாரிக்கையில், 2012ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்டத்தில் பூத்துறை கிராமத்தில் செம்மண் குவாரியில் 28 கோடி ரூபாய் அளவிற்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியதாக பொன்முடி உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்னும் முடித்து வைக்கப்படாத நிலையில், தற்போது அமலாக்கத்துறை கையில் எடுத்திருப்பதாக பேசப்படுகிறது.

விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட பொன்முடி

இந்நிலையில் சுமார் 13 மணி நேரம் ரெய்டு நடந்த நிலையில் சென்னையில் உள்ள தங்கள் அலுவலகத்திற்கு அமைச்சர் பொன்முடியை விசாரணைக்காக அமலாக்கத்துறை அழைத்து செல்லப்பட்டார். இதனால் திமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

சிக்கிய பணம்

ஒருவேளை செந்தில் பாலாஜிக்கு நடந்தது போல் பொன்முடி கைது செய்யப்படுவாரா? எனக் கேள்விகள் எழுந்துள்ளன. இந்த சூழலில் அமைச்சர் பொன்முடி வீட்டில் இருந்து 50 லட்ச ரூபாய்க்கு மேல் ரொக்கம் மற்றும் சில வெளிநாட்டு பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக பேச்சு அடிபடுகிறது.

ஸ்டாலின் பதிலடி

இதுபற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்த பின்னரே, மேற்குறிப்பிட்ட தகவல் உறுதி செய்யப்படும் என்பது கவனித்தக்கது. முன்னதாக இன்று காலை பெங்களூருவிற்கு புறப்பட்ட முதலமைச்சர்

, பொன்முடி மீதான ரெய்டு குறித்து பதிலளித்தார். அப்போது, பொன்முடி மீது கடந்த ஆட்சியாளர்களால் போடப்பட்ட 2 வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

மக்களவை தேர்தல்

எனவே இந்த வழக்கை அவர் சட்ட ரீதியாக எதிர்கொள்வார். எது, எப்படி இருந்தாலும், வரும் நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரையில், இதற்கெல்லாம் நிச்சயமாக மக்கள் பதில் வழங்குவதற்கு தயாராக இருக்கிறார்கள் என்று ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.