சென்னை: தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகனும் திமுக எம்.பி.யுமான கவுதம சிகாமணி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவதற்கு மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் திமுக கூட்டணி கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. கடந்த ஜூன் மாதம் 13ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து நெஞ்சுவலி என கூறி அவர் காவேரி மருத்துவமனையில் […]
