ஆப்கானிஸ்தான் ஏ அணிக்கு எதிராக நடைபெற்ற வளர்ந்துவரும் ஆசியக்கிண்ணத் தொடரின் இரண்டாவது போட்டியில் 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை ஏ அணி தோல்வியடைந்துள்ளது.
கொழும்பு கிரிக்கெட் கழக மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை ஏ அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதற்கமைய ஆப்கானிஸ்தான் ஏ அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 252 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதன்பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 38.5 ஓவர்களில் 241 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.
பந்துவீச்சில் மொஹமட் இப்ராஹிம் 4 விக்கெட்டுகளையும், மொஹமட் சலீம் மற்றும் ரஹ்மான் அக்பர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
இலங்கை அணி விளையாடிய 2 போட்டிகளில் ஒரு போட்டியில் தோல்வியடைந்த காரணத்தால், அடுத்த சுற்றுக்கு தகுதிபெறுவதற்கு ஓமான் அணிக்கு எதிரான போட்டியில் கட்டாய வெற்றிபெறவேண்டும்.
இதேவேளை ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றிபெற்றால், ஓட்ட சராசரியின் அடிப்படையில் பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.