பூமியின் வட துருவத்தில் நிகழ்ந்த மாற்றம்… தாங்க முடியாத சூடு… ஏன் என்னாச்சு தெரியுமா?

பூமியின் வட துருவத்தில் தாங்க முடியாத சூடு. சராசரி வெப்பநிலை தாறுமாறாக எகிறிவிட்டது. இது பல்வேறு சுகாதார குறைபாடுகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி காட்டுத்தீ நிகழ்வுகளை உண்டாக்கி வனப்பகுதியை பேரழிவின் விழிம்பை நோக்கி தள்ளி கொண்டிருக்கிறது.

சீனாவை வதைக்கும் வெயில்…

அதிகரிக்கும் வெப்பநிலை

இத்தகைய பாதிப்புகள் ஓரிரு நாடுகளில் மட்டுமல்ல. பல்வேறு கண்டங்களில் காணப்படுகிறது. வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா என வட துருவத்தில் உள்ள கண்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அடுத்த சில நாட்களில் மேற்குறிப்பிட்ட இடங்களில் வெப்பநிலை புதிய உச்சத்தை தொட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

சிகாகோ நகரை சுழன்றடித்த சூறாவளி… வானில் வந்த பெரிய சிக்கல்… பலமாக ஒலித்த சைரன்!

ஐரோப்பாவின் வானிலை

குறிப்பாக சொல்ல வேண்டுமெனில் உலகில் அதிவேகமாக வெப்பமடைந்து வரும் கண்டமாக ஐரோப்பா காணப்படுகிறது. நடப்பு வாரத்தில் இத்தாலி தீவுகளான சிசிலி, சர்டினியா உள்ளிட்டவற்றில் 48 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும் என கணிக்கப்பட்டுள்ளது.

கதறும் அமெரிக்க மக்கள்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாண மக்கள் கடந்த சில வாரங்களாக அதிக வெப்பத்தை உணர்ந்து வருகின்றனர். ஐரோப்பிய வானிலை ஆய்வு மையத்தை பொறுத்தவரை, கடந்த ஜூன் மாதம் உலகிலேயே அதிக வெப்பநிலையை பதிவு செய்த பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் வரலாறு காணாத வெப்பம்

இதேபோன்ற வானிலை தான் நடப்பு ஜூலை மாதத்திலும் தென்படுகிறதாம். இதையடுத்து சீனாவின் வடமேற்கு பகுதிகளில் 52 டிகிரியை தாண்டி வெப்பநிலை பதிவாகி பொதுமக்களை பெரும் அவதிக்கு ஆளாக்கியுள்ளது. ஜப்பானில் ஹீட் ஸ்டோக் நிகழ்வுகள் அரங்கேற தொடங்கிவிட்டன.

25 மாணவர்களுக்கு விஷம்… பெண் ஆசிரியைக்கு மரண தண்டனை நிறைவேற்றம்… சீனாவில் பரபரப்பு!

ஹீட் ஸ்டோக் சிகிச்சை

இதன் பாதிப்பால் 60 பேருக்கும் மேல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் வட துருவ நாடுகளில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

என்ன காரணம்?

இதன் பின்னணி குறித்து ஆராய்ந்தால் பருவநிலை மாற்றம் தான் முக்கிய காரணமாக விஞ்ஞானிகள் முன்வைக்கின்றனர். இது மனிதர்கள் எதிர்பார்த்ததை விட மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். பெரிய அளவில் வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை சீரழிவுகள் ஏற்படும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.