புதுடெல்லி: உக்ரைனை சேர்ந்த இளம்பெண் அமர்நாத் யாத்திரை மேற்கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “ரஷ்யாவின் தீவிர ராணுவ தாக்குதலை எனது நாடு எதிர் கொண்டுள்ளது. இந்த சூழ்நிலையிலும், சிவபெருமான் மீது கொண்டுள்ள பக்தியின் காரணமாக இந்த யாத்திரையை மேற்கொள்ள முடிவு செய்து இந்தியா வந்தேன்.
பனிலிங்க வடிவில் சிவனை தரிசிக்க வந்த இந்த யாத்திரையின் போது மிகவும் இனிமையானவர்களை சந்திக்க சிவபெருமான் ஆசியால் வாய்ப்பு கிடைத்தது. அவர்கள், தங்களது கூடாரங்கள், வீடுகள் மட்டுமின்றி இதயங்களையும் எனக்காக திறந்து வைத்தனர். அவர்களது குடும்ப உறுப்பினர்களில் ஒருவராக கருதி உதவிகளைச் செய்தனர்.
எனக்கு உணவு, சுகாதார வசதிகள் தந்து பாதுகாப்பாக வைத்துக் கொண்டனர். இவ்வாறு அந்த உக்ரைன் பெண் கூறினார்.