ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை தனது தாயார் சோனியா காந்தியின் 10 ஜன்பத் இல்லத்தில் விவசாயிகளின் குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து மதிய உணவு சாப்பிட்டார். ஹரியானா மாநிலம் சோனேபட்டிற்கு ஜூலை மாதம் 8 ம் தேதி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சென்றிருந்தார். அப்போது விவசாயிகளுடன் கலந்துரையாடிய ராகுல் காந்தி, அவர்களுடன் சேர்ந்து விவசாய பணிகளை மேற்கொண்டார். டிராக்டர் ஒட்டியது மட்டுமல்லாமல் நடவுப் பணியிலும் ஈடுபட்டார். பின்னர் அவர்களுடன் கலந்துரையாடிய ராகுல் காந்தி அவர்களின் கஷ்டங்களை கேட்டறிந்தார். […]
