கராச்சி : பாகிஸ்தான் நாட்டில், 150 ஆண்டுகள் பழமையான மாரியம்மன் கோவில் இடித்து அகற்றப்பட்டது, அங்கு வசிக்கும் ஹிந்துக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நம் அண்டை நாடான பாக்.,கின் கராச்சி நகரில் சோல்ஷர் பஜாரில் மாரியம்மன் கோவில் உள்ளது. 150 ஆண்டுகள் பழமையான இந்த கோவிலை, அதிகாரிகள் இடித்து தரைமட்டமாக்கினர்.
பழமையான மற்றும் ஆபத்தான கட்டடம் என கூறி, இந்த கோவில் இடிக்கப்பட்டது. இது, இங்கு வாழும் ஹிந்துக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். முன்னறிவிப்பு எதுவும் இன்றி கோவில் இடித்து அகற்றப்பட்டதாக கோவிலை பராமரித்து வரும் ராம்நாத் மிஸ்ரா மகாராஜ் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது;
இந்த கோவில் கட்டப்பட்டு 150 ஆண்டுகள் ஆகிறது. இங்கு புதையல் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கோவிலை சமீபகாலமாக பில்டர்கள் குறிவைத்து வந்த நிலையில், தற்போது இடித்துஉள்ளனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக, அப்பகுதியைச் சேர்ந்த மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது;
மதராசி ஹிந்து சமூகத்தினர் இந்த கோவிலை பராமரித்து வந்தனர். எனினும் இந்த கோவில் கட்டடம் பழமையானது என்பதுடன் ஆபத்தானதாகவும் இருந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement