Hukum: HUKUM பாடலின் மூலம் பரபரப்பை கிளப்பிய தலைவர்..இந்த பாடலில் இவ்ளோ விஷயம் இருக்கா ?

ரஜினியின் நடிப்பில் நெல்சனின் இயக்கத்தில் உருவான ஜெயிலர் திரைப்படம் அடுத்த மாதம் திரையில் வெளியாகின்றது. தமன்னா, ரம்யா கிருஷ்ணன் என பலர் நடித்துள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் மோகன்லால், ஷிவ்ராஜ்குமார், ஜாக்கி ஷாரூப் என இந்திய திரையுலகில் இருக்கும் முன்னணி நடிகர்கள் பல இப்படத்தில் நடித்துள்ளதால் ஜெயிலர் ஒரு பான் இந்திய படமாக உருவெடுத்துள்ளது.

இப்படம் துவங்கிய போது இருந்த எதிர்பார்ப்பை விட தற்போது இப்படத்தின் எதிர்பார்ப்பு பலமடங்கு உயர்ந்துள்ளது. அதற்கு காரணம் இப்படத்தில் இருந்து வெளியான போஸ்டர்ஸ் மற்றும் கிலிம்ஸ் வீடியோக்கள் தான்.

வெளியான ஹுக்கும்

மேலும் சில நாட்களுக்கு முன்பு ஜெயிலர் படத்தில் இருந்து காவாலா என்ற பாடல் வெளியாகி மாஸ் ஹிட்டடித்துள்ளது. என்னதான் இப்பாடல் தமன்னாவை முன்னிலைப்படுத்தியே இருந்தாலும் ரசிகர்களின் அமோகமான வரவேற்பை பெற்றுள்ளது. யூடியூபில் பல சாதனைகளை செய்து வரும் காவாலா பாடலை அடுத்து தற்போது ஜெயிலர் படத்தில் இருந்து ஹுக்கும் என்ற பாடல் வெளியாகியுள்ளது.

Maaveeran box office collection day4: வசூலில் அடித்து நொறுக்கும் மாவீரன்..மொத்தமாக இத்தனை கோடியா ? அடேங்கப்பா..!

தலைவரின் ரசிகர்களுக்கு சிறப்பான ஒரு விருந்தை இப்பாடல் கொடுத்துள்ளது என்றுதான் சொல்லவேண்டும். காவாலா பாடல் வெளியானபோது ஏமாற்றமடைந்த ரஜினி ரசிகர்கள் சிலர் இப்பாடலை கேட்டதும் குஷியில் இருக்கின்றனர். இந்நிலையில் ஹுக்கும் பாடல் செம மாஸாக இருப்பதாகவும், ரஜினி வேற லெவெலில் இருப்பதாகவும் ரசிகர்கள் கமன்ட் அடித்து வருகின்றனர்.

கொண்டாடும் ரசிகர்கள

மேலும் இப்பாடலில் இடம்பெற்றுள்ள வரிகள் ரஜினியின் நிஜ வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில் இருப்பதாக சிலர் பேசி வருகின்றனர். திரைத்துறையில் பல ஆண்டுகளை கடந்தும் இன்று ரஜினி சூப்பர்ஸ்டாராக இருக்கின்றார் என்பதை இப்பாடல் வரிகள் உணர்த்துகின்றன. அதன் காரணமாகவே இப்பாடல் ரஜினி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது.

அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்

ரஜினியின் நடை, உடை, வசனங்கள் என அனைத்தும் ரசிகர்களை வெகுவாக ஈர்க்க ஜெயிலர் திரைப்படம் பழைய ரஜினியை நமக்கு கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் காவாலா பாடலின் சாதனையே இன்னும் முடிவிற்கு வராத நிலையில் ஹுக்கும் பாடல் என்னென்ன சாதனைகள் படைக்குமோ என ஆவலாக ரசிகர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.