வாஷிங்டன் : அமெரிக்காவின் அலாஸ்கா தீபகற்பத்தில் நேற்று காலை சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
அமெரிக்க மாகாணங்களில் ஒன்று அலாஸ்கா. இது அமெரிக்காவில் இருந்து சற்று தள்ளி கனடாவுக்கு மேல், வட துருவத்திற்கு மிக அருகில் உள்ளது.
இந்த தீபகற்ப பகுதியில் நேற்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில், 7.2 ஆக பதிவானது. இதனால் கட்டடங்கள் குலுங்கின. அச்சமடைந்த பொதுமக்கள் சாலைகளில் தஞ்சமடைந்தனர். இதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டதால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.
இந்த நிலநடுக்கம் அலாஸ்கா தீபகற்பம் மட்டுமின்றி, அலுடியன் தீவுகள் மற்றும் குக் இன்லெட் பகுதிகளிலும் உணரப்பட்டது.
நிலநடுக்கத்தால் உயிர்ச் சேதமோ, பொருட் சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை. சுனாமி எச்சரிக்கையை தொடர்ந்து அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement