பாரீஸ்: விண்ணில் ஏராளமான விண்கற்கள் சுற்றி வருகின்றன. சில சமயங்களில் அவை புவிஈர்ப்பு விசைக்குள் நுழைந்தால் பூமியை நோக்கி அதிகவேகத்தில் வரும். பூமியின் தட்பவெப்ப நிலை காரணமாக வழியிலேயே எரிந்துபோய்விடும்.
அதிலும் தப்பி சில விண்கற்கள் பூமியில் வந்து விழுந்து உள்ளன. பாரீசில் அடுக்குமாடி குடியிருப்பில் பெண் ஒருவர் பால்கனியில் நின்று காபி குடித்துள்ளார். அப்போது அவரின் விலா பகுதியில் சிறிய கல் ஒன்று வந்து விழுந்தது.
அவர் கூறும்போது, வீட்டின் அருகே பெரிய சத்தம் கேட்டது.
சில வினாடிகளில், எனது இடுப்பு பகுதியில் அதிர்ச்சியை உணர்ந்தேன். ஒரு கல் கீழே கிடந்தது. சிமென்டால் ஆன கல்லாக அது இல்லை. எனவே புவியியல் ஆய்வாளரான தியர்ரி ரெப்மேன் வசம் காண்பித்தேன். அவர் அது வேற்றுகிரக பொருள் என்றும், இரும்பு – சிலிகான் கலவையால் செய்யப்பட்டது என்றும் கூறினார். எனவே இது விண்கல் என உறுதியானது என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement