டெல்லி: கேரளாவில் 22 ஆம் தேதி வரை கனமழை பெய்யும் என்றும், தமிழ்நாடு புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்துள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமம் அடைந்து வருகிறது. அதுபோல வட மாநிலங்களிலும் மழைக்காலம் தொடங்கி, மழை பெய்து வருகிறது. இதனால் கேரளா, தலைநகர் டெல்லி உள்பட பல மாநிலங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வடமேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியிருப்பதாகவும் […]
