நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்… ரெண்டு பக்கமும் பலே வியூகம்… இந்த வாட்டி சம்பவம் இருக்கு!

ஜூலை 20, அதாவது நாளைய தினம் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குகிறது. கடந்த கூட்டத்தொடர் அதானி விவகாரம், ராகுல் காந்தி அமெரிக்காவில் பேசியது ஆகிய விவகாரங்களை கையிலெடுத்து கொண்டு எதிர்க்கட்சிகளும், ஆளும் பாஜகவும் கடும் அமளியில் ஈடுபட்டன. அடுத்தடுத்து அவை ஒத்திவைப்பு நடவடிக்கைகள் மட்டுமே நடந்தன.

நாடாளுமன்ற கூட்டத்தொடர்

இதனால் ஆரோக்கியமான விவாதம் ஏற்பட வாய்ப்பே உண்டாகவில்லை. கடைசி நாள் இப்படியே கடந்து போனது. இதன்மூலம் பல கோடி ரூபாய் அளவிற்கு மக்களின் வரிப்பணம் தான் வீணானது. இந்நிலையில் தான் அடுத்த கூட்டத்தொடருக்கு அரசியல் கட்சிகள் தயாராகியுள்ளன. இம்முறை புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் கூட்டம் நடைபெறுகிறது.

மக்களவை தேர்தல் வியூகம்

2024 மக்களவை தேர்தலை ஒட்டி ஆளும் பாஜக தலைமையிலான கூட்டணியும், எதிர்க்கட்சிகள் கூட்டணியும் கடந்த சில நாட்களாக தீவிர ஆலோசனை நடத்தி முக்கியமான முடிவுகளை எடுத்துள்ளன. இதன் தொடர்ச்சியாக நடக்கும் கூட்டத்தொடர் என்பதால் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

தயாராகும் எதிர்க்கட்சிகள்

ஆளும் கட்சிக்கு நெருக்கடி தர எதிர்க்கட்சிகள் எந்தெந்த விஷயங்களை கையிலெடுக்கப் போகின்றனர்? தாங்கள் லிஸ்ட் போட்டு வைத்துள்ள மசோதாக்களை மத்திய அரசு கச்சிதமாக நிறைவேற்றுமா? போன்ற கேள்விகள் எழுகின்றன. ஆளுங்கட்சியை பொறுத்தவரை டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையிலான சட்டத்திருத்த மசோதா,

தாக்கல் செய்யப்படும் மசோதாக்கள்

வரி சேகரிப்பு மசோதா, ஐ.எம்.எஃப் மற்றும் வங்கி மசோதா, டிஜிட்டல் தரவுகளை பாதுகாக்கும் வகையிலான மசோதா, தபால் சேவை மசோதா, ஜன் விஸ்வாஸ் மசோதா, மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் தொடர்பான மசோதா, பழங்கால நினைவு சின்னங்கள், அகழ்வாராய்ச்சி பகுதிகளை பாதுகாக்கும் மசோதா,

எதிர்க்கட்சிகள் டார்கெட்

டி.என்.ஏ தொழில்நுட்பத்தை ஒழுங்குமுறைப்படுத்தும் மசோதா ஆகியவற்றை தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது. மறுபுறம் மணிப்பூர் கலவரம், விலைவாசி உயர்வு, மத்திய புலனாய்வு அமைப்புகளை ஏவி அச்சுறுதல் போன்ற விஷயங்களை கையிலெடுத்து ஆளுங்கட்சிக்கு நெருக்கடி தர எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன.

அனைத்து கட்சி கூட்டம்

இந்த சூழலில் தான் மழைக்கால கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. டெல்லியில் இன்று நடைபெறும் கூட்டத்தில் பிரதமர் மோடி, மூத்த அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

இன்று முக்கிய ஆலோசனை

இன்றைய கூட்டத்தில் மழைக்கால கூட்டத்தொடரில் விவாதிக்கப்படக் கூடிய விஷயங்கள், எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் கோரிக்கைகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.