சென்னை: பாட்டிலுக்கு ரூ.10 எக்ஸ்ட்ரா விவகாரம் சர்ச்சைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், டாஸ்மாக் கடைகளில் மதுபானத்தை கூடுதல் விலைக்கு விற்றால், விற்பனை செய்த ஊழியர்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர் ‘சஸ்பெண்டு’ செய்யப்படுவார் என டாஸ்மாக் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் திமுக அரசு பதவியேற்ற பிறகு, செந்தில் பாலாஜி டாஸ்மாக் அமைச்சராக பதவி ஏற்றதும், டாஸ்மாக் மதுபான கடைகளில் பல்வேறு தில்லுமுல்லுகள் அரங்கேறின. டாஸ்மாக் மதுபான் கடைகள் அதிகரிப்பு மற்றும் ஏராளமான சட்டவிரோத பார்கள் திறக்கப்பட்டன. மேலும் […]
