பெங்களூருபெங்களூரில் கடந்த 17, 18ல் எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்தின. இதன் தலைவர்களுக்கு தங்கும் இடம் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி தர, மாநில காங்கிரஸ் அரசு மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை பயன்படுத்தியதாக, எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
இது குறித்து, கர்நாடக சட்டசபையில் நேற்று கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ‘ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை கட்சி கூட்டங்களுக்கு வரும் தலைவர்களை வரவேற்க நியமித்தது விதிமுறை மீறிய செயலாகும்’ என கூறி, பா.ஜ.,வினர் சபாநாயகர் இருக்கை முன் தர்ணாவில் ஈடுபட்டனர்.
ஒரு கட்டத்தில் ஆவேசம் அடைந்த பா.ஜ., உறுப்பினர்கள், சட்ட மசோதாவின் நகல்களை கிழித்து, சபாநாயகர் இருக்கையில் அமர்ந்திருந்த துணை சபாநாயகர் ருத்ரப்பா லமானி மீது வீசி எறிந்தனர். இதனால், கடும் கூச்சல், குழப்பம் நிலவியது. சட்டசபை ஒத்தி வைக்கப்பட்டது.
மதியம் மீண்டும் சட்டசபை கூடியதும், பா.ஜ.,வின் அஸ்வத் நாராயணா, சுனில்குமார், அசோக், அரக ஞானேந்திரா உட்பட 10 உறுப்பினர்கள், இந்த கூட்டத்தொடர் முழுதும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக, சபநாயகர் காதர் அறிவித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement