புதுடில்லிபசு கன்றுகள் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது, எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று மறுத்துள்ள உச்ச நீதிமன்றம், ‘இதில் பார்லிமென்ட் தான் நடவடிக்கை எடுக்க முடியும்’ என, குறிப்பிட்டுள்ளது.
பசுக்கள் கொல்லப்படுவதை தடுக்க சட்டம் இயற்றக் கோரி, பல வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
இவற்றை விசாரித்த நீதிபதிகள் ஏ.எஸ். ஓகா, சஞ்சய் கரோல் அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்த விவகாரம் தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயம் ஏற்கனவே விசாரித்துள்ளது.
அதில், மத்திய அரசின் 2013ம் ஆண்டு தேசிய கால்நடை கொள்கை மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. இதன்படி பசு உள்ளிட்ட கால்நடைகள் பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
பல மாநிலங்களும், பசுக்கள் கொல்லப்படுவதை தடுக்க சட்டங்கள் இயற்றியுள்ளன.
இதனால், இதில் எந்த உத்தரவும் பிறப்பிக்க வேண்டிய அவசியமில்லை என, பசுமை தீர்ப்பாய உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், பசு கன்றுகள் வதையை எதிர்த்து இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து பார்லிமென்ட் தான் உரிய சட்டம் இயற்ற வேண்டும். சட்டம் இயற்றும்படி அரசுக்கு எந்த உத்தரவையும் நீதிமன்றத்தால் பிறப்பிக்க முடியாது.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement