கராச்சி: பாகிஸ்தானில், ஹிந்து கோவில் மீது சமீபத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து, சிந்து மாகாணத்தில் உள்ள கோவில்களில், 400க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
நம் அண்டை நாடான பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் ஹிந்துக்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றனர். இங்கு 100 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான ஹிந்து கோவில்கள் உள்ளன.
இந்நிலையில், சிந்து மாகாணத்தின் காஷ்மோர் பகுதியில் உள்ள ஹிந்து கோவில் மற்றும் அதை சுற்றியுள்ள ஹிந்துக்களின் வீடுகள் மீது, அடையாளம் தெரியாத ஒரு கும்பல், ‘ராக்கெட் லாஞ்சர்’ வாயிலாக சமீபத்தில் தாக்குதல் நடத்தியது.
ராக்கெட் லாஞ்சர் வெடிக்காததால் அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த விவகாரம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தாக்குதல் நடத்திய கும்பலை தேடி வருகின்றனர்.
இந்நிலையில், சிந்து மாகாணத்தில் உள்ள ஹிந்து கோவில்களுக்கு உயர் பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இங்கு, 400க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement