Atlee: கீர்த்தி சுரேஷை தன் இரண்டாவது பாலிவுட் படத்தில் நடிக்க வைக்க முடிவு செய்திருக்கிறாராம் இயக்குநர் அட்லி.
அட்லிபாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கியிருக்கிறார் அட்லி. அந்த படம் மூலம் பாலிவுட்டில் இயக்குநராக அறிமுகமாகிறார். செப்டம்பர் மாதம் 7ம் தேதி ரிலீஸாகும் ஜவான் படம் மூலம் அட்லியுடன் சேர்ந்து நயன்தாராவும், அனிருத்தும் பாலிவுட்டில் அறிமுகமாகிறார்கள். இந்நிலையில் தான் நயன்தாராவை அடுத்து கீர்த்தி சுரேஷ் பக்கம் அட்லியின் கவனம் திரும்பியிருக்கிறது.ரோல் மாடல்நயன்தாரா எனக்கு பெரிய முன் உதாரணம்கீர்த்தி சுரேஷ்ஜவானை அடுத்து வருண் தவானை வைத்து இந்தி படத்தை இயக்கவிருக்கிறார் அட்லி. அந்த படத்தில் வருண் தவானுக்கு ஜோடியாக நடிக்க கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம். அப்படி அவர் ஒப்புக் கொண்டால் இது தான் கீர்த்தி நடிக்கும் முதல் இந்தி படமாகும். அட்லிக்கு கீர்த்தி சுரேஷ் நிச்சயம் சம்மதம் தெரிவிப்பார் என்றே நம்பப்படுகிறது.
தெறி ரீமேக்தளபதி விஜய், சமந்தா, ஏமி ஜாக்சன் உள்ளிட்டோரை வைத்து தான் இயக்கிய தெறி படத்தை தான் வருண் தவானை வைத்து இந்தியில் ரீமேக் செய்கிறார் அட்லி என கூறப்படுகிறது. ஒரு ஹீரோயின் கீர்த்தி சுரேஷ் என்றால், இன்னொரு ஹீரோயின் யார் என்கிற கேள்வி எழுந்துள்ளது. வருண் தவான் படத்தை அடுத்த ஆண்டு மே மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்களாம்.
மைதான்முன்னதாக அஜய் தேவ்கன் நடிப்பில் வெளியான மைதான் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க கீர்த்தி சுரேஷை ஒப்பந்தம் செய்தார்கள். இதையடுத்து தன் உடல் எடையை வெகுவாக குறைத்து ஸ்லிம்மானார். ஆனால் அதன் பிறகு அந்த பட வாய்ப்பு கீர்த்தி சுரேஷின் கை நழுவிப் போனது. இந்த படம் போனால் பரவாயில்லை கீர்த்திமா என ரசிகர்கள் ஆறுதல் கூறினார்கள். இந்நிலையில் தற்போது கீர்த்தியை தேடி மீண்டும் பாலிவுட் பட வாய்ப்பு வந்திருக்கிறது.
ஷாருக்கான் ரசிகர்கள்அட்லி தன் முதல் பாலிவுட் படம் ரிலீஸாவதற்கு முன்பே ஷாருக்கான் ரசிகர்களை தன் பக்கம் இழுத்துவிட்டார். ஜவான் ட்ரெய்லரில் ஷாருக்கானை மொட்டைத் தலை கெட்டப்பில் வில்லத்தனம் கலந்த கதாபாத்திரத்தில் பார்த்த பாலிவுட் ரசிகர்கள் அசந்துவிட்டார்கள். இந்த தமிழ் இயக்குநர் வித்தியாசமாக இருக்கிறாரே என பேசத் துவங்கிவிட்டார்கள்.
Rajinikanth: மாலத்தீவுகள் பீச்சில் சில்லிங் செய்யும் ரஜினி: ஷார்ட்ஸ், டி சர்ட்டில் செம கூல்
விஜய் சேதுபதிஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி. ஷாருக்கானுடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்கிற ஒரே காரணத்திற்காக ஜவானில் நடித்தாக விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். ஒரு பைசா கூட சம்பளம் கொடுக்காமல் இருந்திருந்தாலும் நான் ஜவானில் நடித்திருப்பேன் என கூறி ஷாருக்கான் ரசிகர்களை நெகிழ வைத்துவிட்டார் மக்கள் செல்வன்.
Jawan: சம்பளமே கொடுக்காவிட்டாலும் ஜவானில் நடித்திருப்பேன், ஏன்னா…: விஜய் சேதுபதி
நயன்தாராஜவான் படத்தில் ஆக்ஷன் ஹீரோயினாக கெத்து காட்டியிருக்கிறார் நயன்தாரா. அவரை நினைத்து மிகவும் பெருமையாக இருப்பதாக கணவர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார். ஷாருக்கான் படங்களை பார்த்து ரசித்தது போக தற்போது அவருக்கே ஜோடியாக நடித்திருக்கும் தன் தங்கத்தை நினைத்து சந்தோஷப்பட்டிருக்கிறார் விக்னேஷ் சிவன். மனைவியின் வளர்ச்சியை பார்த்து மகிழும் விக்னேஷ் சிவனின் இந்த குணம் தான் ரசிகர்களுக்கு பிடித்திருக்கிறது.
Rajinikanth: ஜெயிலர் நெல்சனை திட்டாதீங்க: அந்த ஐடியா ரஜினி கொடுத்ததாம்