மாநகரம் படத்தின் மூலம் அறிமுமாகி கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்த லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய்யை வைத்து லியோ படத்தை இயக்கி வருகிறார்.
இந்தப் படத்தின் இறுதிக் கட்டப் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ரஜினியின் 171-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவிருப்பதாக வெளியான தகவல் குறித்தும் பதிலளித்திருக்கிறார்.

கோவையில் தனியார் கல்லாரியின் நிகழ்ச்சி ஒன்றில் லோகேஷ் கனகராஜ் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவரிடம் மாணவர்கள் பல்வேறு கேள்விகளைக் கேட்டனர். அந்தவகையில் லியோ படத்தின் அப்டேட் குறித்து கேட்டபோது அக்டோபர் 19 ஆம் தேதி படம் வெளியாகும் என்று தெரிவித்திருக்கிறார். பின் அஜித்தை வைத்து படம் எடுப்பீர்களா என்ற கேள்வி கேட்டற்கு வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் அஜித்தை வைத்து படம் பண்ணுவேன் என கூறியிருக்கிறார்.
அவரது ட்ரீம் ப்ராஜெக்ட் பற்றி கேட்டதற்கு ‘இரும்புக் கை மாயாவி’ நான் 10 வருடமாக எழுதிய கதை. அதுதான் என்னுடைய ட்ரீம் ப்ராஜெக்ட் என்றிருக்கிறார். கோவையைப் பற்றி பேசிய அவர் கோவையில் படிக்கும் மாணவர்களுக்குத் தேவையான சினிமா வாய்ப்புகளை இங்கேயே ஏற்படுத்த வேண்டும் என்று கூறியிருக்கிறார். ரஜினியை வைத்துப் படம் இயக்கவுள்ளதாகத் வெளியான தகவல் குறித்துக் கேட்டதற்கு, தயாரிப்பு தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிவித்தார்.