Lokesh kanagaraj: லியோ இசை வெளியீட்டு விழா எப்போது ? லோகேஷ் சொன்ன செம அப்டேட்..!

விஜய்யின் நடிப்பில் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் தான் லியோ. கடந்த ஜனவரி மாதம் துவங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவுபெற்று போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகின்றது..

விஜய்யுடன் இப்படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன், மன்சூர் அலி கான் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். மேலும் இது முழுக்க முழுக்க லோகேஷின் ஸ்டைலில் உருவாகும் படம் என்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு பலமடங்கு உயர்ந்துள்ளது.

லியோ இசை வெளியீட்டு விழா

எனவே ரசிகர்கள் லியோ திரைப்படத்தில் வித்யாசமான விஜய்யை பார்க்கலாம் என ஆவலாக இருக்கின்றனர். இந்நிலையில் இப்படம் வெளியீட்டிற்கு முன்னே தயாரிப்பாளருக்கு பலகோடி லாபத்தை ஈட்டி தந்துள்ளது. மேலும் லியோ வெளியான பிறகு இப்படம் ஆயிரம் கோடி வசூலை எட்டும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Hukum: அப்போ சொன்னாரு..இப்போ செஞ்சிட்டாரு..ரஜினியை பற்றி வெளிப்படையாக பேசிய விஜய்..!

இதையடுத்து லியோ படத்தின் முதல் பாடலாக நா ரெடி என்ற பாடல் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இருப்பினும் இப்பாடல் சில சர்ச்சைகளில் சிக்கியது. இருந்தாலும் யூடியூபில் நா ரெடி பாடல் மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் ஒரு கல்லூரி விழாவில் கலந்துகொண்டு லியோ படத்தை பற்றிய ஒரு சில விஷயங்களை பகிர்ந்துகொண்டார். வழக்கம் போல லியோ LCU வா இல்லையா என்பது படம் வெளியான பின்னர் தான் தெரியவரும் என்று கூறிய லோகேஷ் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவை பற்றிய அப்டேட்டை வெளியிட்டார்.

லோகேஷ் சொன்ன அப்டேட்

அதாவது லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் மாதம் நடைபெறும் என கூறியுள்ளார் லோகேஷ். ஆனால் இசை வெளியீட்டு விழா நடக்கும் இடத்தை இன்னும் தேர்வு செய்யவில்லை என்றும், அதைப்பற்றி தான் தற்போது பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது என்றும் கூறினார் லோகேஷ் கனகராஜ்.

அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்

இந்நிலையில் இந்த தகவலை அடுத்து ரசிகர்கள் அனைவரும் லியோ இசை வெளியீட்டு விழாவில் விஜய்யின் பேச்சை கேட்க தற்போதே ஆவலாக எதிர்பார்த்து இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.