சென்னை: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ளது ஜெயிலர் படம். அடுத்தமாதம் 10ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ளது.
இந்தப் படத்தை தொடர்ந்து லால் சலாம் படத்தின் சூட்டிங்கையும் ரஜினிகாந்த் முடித்துள்ளார். தற்போது மாலத்தீவில் விடுமுறை கொண்டாட்டத்தில் உள்ளார்.
இந்தப் படத்தை தொடர்ந்து ஞானவேல் இயக்கத்திலும் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் நடிக்க கமிட்டாகியுள்ளார்.
ஹுக்கும் பாடலாசிரியருக்கு ரஜினிகாந்த் பாராட்டு: நடிகர் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, சுனில், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப், மோகன்லால் என முன்னணி நடிகர்கள் இணைந்துள்ள படம் ஜெயிலர். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ளது. இதற்கான பிரமோஷன்களில் படக்குழுவினர் தற்போது ஈடுபட்டுள்ளனர். இந்தப் படத்தின் அடுத்தடுத்த இரு பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளன.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ரஜினிகாந்த், தமன்னா இணைந்திருந்த காவாலா பாடல் பர்ஸ்ட் சிங்கிளாக வெளியானது. அனிருத் இசையில் இந்தப் பாடல் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து யூடியூபில் ட்ரெண்டிங்கில் இருந்தது. குறிப்பாக இந்தப் பாடலில் தமன்னாவின் ஆட்டம் சிறப்பாக அமைந்திருந்தது. இதன் மேக்கிங் வீடியோவையும் படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். இந்தப் பாடலை தொடர்ந்து ஹுக்கும் என்ற இரண்டாவது பாடலையும் வெளியிட்டுள்ளனர்.
ரஜினியின் அதிரடி சரவெடியாக அமைந்துள்ள இந்தப் பாடலை சூப்பர் சுப்பு எழுதியுள்ளார். இந்தப் பாடலும் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து ட்ரெண்டிங்கில் உள்ளது. ரஜினியின் எனர்ஜி இந்தப் பாடலில் மிகவும் சிறப்பாக அமைந்திருந்தது. இந்நிலையில், இந்தப் பாடலுக்காக தன்னை சூப்பர்ஸ்டார் ரஜினி பாராட்டியதாக சூப்பர் சுப்பு தெரிவித்துள்ளார். அவர் தனது சமீபத்திய பேட்டியில், இதுகுறித்து ரஜினிகாந்த், தனக்கு வாய்ஸ் நோட் அனுப்பியதாக கூறியுள்ளார்.
சூப்பர் சுப்பு தனது பேட்டியில் ரஜினியின் வாய்ஸ் நோட்டை அப்படியே கூறியுள்ளார். வணக்கம் சுப்பு என்று கூறிய ரஜினிகாந்த், ஹுக்கும் பாடல் கண்டிப்பாக சுப்புவிற்கு மிகப்பெரிய பிரேக்கை தரும் என்றும் கூறியதாகவும் இந்தப் பாடலுக்காக நன்றி என்று அவர் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்தப் பாடலை கேட்கும் ரசிகர்கள், கண்டிப்பாக மிகுந்த உற்சாகமடைவார்கள் என்று ரஜினி கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

சூப்பர் சுப்பு எழுதியுள்ள இந்தப் பாடல் முழுக்க முழுக்க மாஸாக உருவாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. சில சர்ச்சைகளையும் ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும் ரசிக்களை பாடலை கொண்டாடி வருகின்றனர். யூடியூப் ட்ரெண்டிங்கிலும் இந்தப் பாடல் சிறப்பான இடத்தை பிடித்துள்ளது. ஜெயிலர் படத்தில் ரஜினியின் கெட்டப் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. படத்தில் அவர் ஜெயிலராக நடித்துள்ளதும் ஒரே நாளில் நடக்கும் கதையை மையமாக கொண்டு படம் உருவாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.