Thalapathy vijay: நான் பழசை மறக்கமாட்டேன்..சூப்பர்ஸ்டார் டைட்டில் பற்றி ஓபனாக பேசிய விஜய்..!

தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தற்போது இந்திய சினிமாவிலும் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வருபவர் தான் நடிகர் விஜய். ஹீரோவாக அறிமுகமாகி பல போராட்டங்களையும் அவமானங்களையும் சந்தித்து தற்போது தளபதியாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றார் விஜய். என்னதான் இவரது திரைப்படங்கள் விமர்சன ரீதியாக முன்ன பின்ன இருந்தாலும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்து வருகின்றது.

படத்திற்கு படம் வசூலில் புது புது சாதனையை விஜய் படைத்து வருவதால் இவரின் மார்க்கெட்டும் படத்திற்கு படம் உயர்ந்து வருகின்றது. அந்த வகையில் விஜய் அடுத்ததாக நடிக்கவுள்ள தளபதி 68 படத்திற்காக விஜய்க்கு 200 கோடி சம்பளமாக கொடுக்கப்பட இருப்பதாக பேசப்பட்டு வருகின்றது.

சூப்பர்ஸ்டார் பட்டம் வேண்டாம்

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர்ஸ்டார் யார் என்ற கேள்வி தான் விவாதமாக மாறியுள்ளது. தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர்ஸ்டார் விஜய் தான் என சிலர் கூற இது ரஜினி ரசிகர்களை வெகுவாக சீண்டியது.

Maaveeran: சிவகார்த்திகேயனின் இந்த மனசு வேறு யாருக்கு வரும்..மாவீரன் தயாரிப்பாளரின் நெகிழ்ச்சியான பதிவு..!

இதையடுத்து ரஜினி தான் தமிழ் சினிமாவின் நிரந்தர சூப்பர்ஸ்டார் என ரஜினி ரசிகர்கள் பதிலளிக்க இது மோதலாக மாறியது. மேலும் இந்த மோதலைஅதிகரித்த வண்ணம் ஜெயிலர் படத்தில் இருந்து ஹுக்கும் என்ற பாடல் வெளியாகியுள்ளது. ரஜினியின் ஜெயிலர் படத்தில் இருந்து வெளியான ஹுக்கும் பாடலில் இடம்பெற்ற வரிகள் ரஜினி தான் நிரந்தர சூப்பர்ஸ்டார் என்பது போல இருக்கின்றது.

மேலும் பட்டத்தை பறிக்க நூறு பெரு என்ற வரி விஜய் ரசிகர்களிடம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து விஜய் மற்றும் ரஜினி ரசிகர்கள் இடையே மோதல் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த மோதலை தடுக்கும் வகையில் தற்போது ஒரு விஷயம் வெளியாகியுள்ளது.

தளபதியே போதும் என்ற விஜய்

அதாவது விஜய் ஒரு மேடையில் தான் எப்போதும் தளபதியாகவே இருக்க விரும்புவதாக கூறிய விஷயம் தான் அது. கடந்த 2014 ஆம் ஆண்டு ஒரு விருது வழங்கும் விழாவில் விஜய்யிடம், உங்களுக்கு பிடித்த டைட்டில் எது என கேள்விகேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த விஜய், நான் எப்போதும் பழசை மறக்க மாட்டேன்.

அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்

எனக்கு ரசிகர்கள் வைத்த இளைய தளபதி டைட்டில் தான் வேண்டும். சூப்பர்ஸ்டார் டைட்டில் மீது எனக்கு ஆசை இல்லை என கூறியுள்ளார். இதையடுத்து விஜய்யே சூப்பர்ஸ்டார் டைட்டிலுக்கு ஆசைப்படவில்லை. பிறகு ரசிகர்கள் ஏன் மோதலில் ஈடுபடவேண்டும் என சிலர் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.