மும்பை: நடிகை வித்யாபாலன் பாலிவுட்டின் சிறந்த நடிகைகளில் ஒருவராக நீடித்து வருகிறார். பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.
டர்ட்டி பிக்சர் என்ற படத்தில் சில்க் ஸ்மிதாவாக நடித்ததற்காக தேசிய விருதை பெற்றார். பெண்களை மையப்படுத்திய பல படங்களில் இவர் நடித்துள்ளார்.
தமிழ் பெண்ணான வித்யா பாலன், சமீபத்தில்தான் தமிழில் அறிமுகமானார். நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்தின் ஜோடியாக நடித்திருந்தார்.
சித்தார்த்துடன் திருமணம் குறித்து மனம்திறந்த வித்யா பாலன்: நடிகை வித்யாபாலன் பாலிவுட்டின் சிறந்த நடிகைகளில் ஒருவராக நீடித்து வருகிறார். டர்ட்டி பிக்சர் படத்தில் சில்க் ஸ்மிதாவாக நடித்து தேசிய விருதை தட்டித் தூக்கினார். பெண்களை மையப்படுத்திய பல படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். கஹானி, தும்ஹாரி சூலு போன்ற பல படங்கள் இத்தகைய படங்களாக வித்யா பாலனுக்கு அமைந்தது. பாலிவுட்டில் அனைத்து நாயகிகளும் ஸ்லிம்மாக ரசிகர்களை கவர்ந்துவரும் நிலையில், அதிகமான உடல் எடையுடன் தொடர்ந்து படங்களில் நீடித்து வருகிறார்.
தான் நடிக்க வந்து நீண்ட வருடங்களுக்கு பிறகு சமீபத்தில்தான் தமிழில் இவரது அறிமுகம் நிகழ்ந்தது. நடிகர் அஜித்துடன் நேர்கொண்ட பார்வை என்ற படத்தில் ஜோடியாக நடித்துள்ளார். ஹெச் வினோத் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் சிறிது நேரமே வந்தாலும் தன்னுடைய நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தார் வித்யா பாலன். தமிழில் இத்தகைய கால தாமதம் ஏன் என்பது குறித்தும் அவர் தனது பேட்டியொன்றில் பேசியுள்ளார்.
தமிழில்தான் தன்னுடைய அறிமுகத்தை செய்யவிருந்ததாகவும் ஆனால், பல இயக்குநர்கள் தன்னை நிராகரித்ததாகவும் ஒரு தயாரிப்பாளர் தன்னுடைய தோற்றம் குறித்து மோசமாக பேசியதாகவும் அவரை மறக்கவே மன்னிக்கவோ முடியாது என்றும் வித்யா பாலன் தெரிவித்தார். தமிழின் பிரபல இயக்குநர் ஒருவர் தன்னிடம் அட்ஜஸ்ட்மெண்டை எதிர்பார்த்ததாகவும் இத்தகைய காரணங்களால் தன்னால் தமிழில் நடிக்க முடியாமல் போனதாகவும் வித்பா பாலன் மேலும் கூறியுள்ளார்.
தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து வெளிப்படையாக பகிர்ந்து வருபவர் வித்யா பாலன். இவருக்கும் சித்தார்த் ராய் கபூருக்கும் கடந்த 2012ம் ஆண்டில் திருமணம் நடைபெற்றது. பிரபல தயாரிப்பாளரான இவர் முன்னதாக இருமுறை திருமணம் செய்து விவாகரத்து செய்தவர். இதனால் வித்யா பாலனின் பெற்றோர் இவர்களது திருமணத்திற்கு க்ரீன் சிக்னல் காட்டவில்லை. இருவரும் காதலித்த போதிலும் திருமணத்திற்கு ஒப்புதல் கிடைக்கவில்லை. பின்பு வித்யாவின் முடிவை குடும்பத்தினர் ஏற்றுக் கொண்டனர்.
முன்னதாக இருவரும் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தபோது தங்களது திருமணம் குறித்து சித்தார்த்தான் முதலின் பேசியதாகவும், தனக்கு இதுதொடர்பாக எந்த ஐடியாவும் இல்லை என்றபோதிலும் சித்தார்த் கேட்டபோது உடனடியாக ஒப்புக் கொண்டதாகவும் வித்யா பாலன் குறிப்பிட்டுள்ளார். தன்னுடைய கேரியரின் உச்சத்தில் இருந்தபோது வித்யாபாலன் திருமணம் செய்துக் கொண்டார் தொடர்ந்து நடித்தும் வருகிறார்.
சமீபத்தில் வித்யா பாலன் கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இதை மறுத்துள்ளார் வித்யா. தான் கர்ப்பமாக இருந்தால் அதை கண்டிப்பாக பகிரங்கமாக அறிவிப்பேன் என்றும் தான் கர்ப்பமாக இருப்பதாக கருதி, பார்ப்பவர்கள் அனைவரும் தன்னுடைய வயிற்றையே பார்ப்பது தனக்கு எரிச்சலை ஏற்படுத்துவதாகவும் வித்யாபாவன் குறிப்பிட்டுள்ளார். குழந்தையை பெற்று வளர்ப்பது என்பது மிகப்பெரிய விஷயம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.