World must prepare to face increasingly intense heatwaves: UN | “வெப்ப அலைகளை எதிர்கொள்ள தயாராக வேண்டும்”: ஐநா எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

வாஷிங்டன்: வெப்ப அலை நிகழ்வுகள் தொடர்ந்து தீவிரமடையும்; அதை எதிர்க்கொள்ள மக்கள் தயாராக இருக்க வேண்டும் என ஐநா எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஐ.நா.வின் உலக வானிலை அமைப்பின், மூத்த வெப்ப ஆலோசகர் ஜான் நேர்ன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

வெப்ப அலைகள் மிகவும் ஆபத்தான இயற்கை ஆபத்துகளில் ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான மக்கள் வெப்பத்தால் ஏற்படும் உடல் சோர்வால் இறக்கின்றனர்.

வெப்ப அலை நிகழ்வுகள் தொடர்ந்து தீவிரமடையும்; அதை எதிர்க்கொள்ள மக்கள் தயாராக இருக்க வேண்டும். வெப்ப அலைகளை தடுக்க கார்பன் எரிபொருட்களை நிறுத்த வேண்டும். அனைத்தையும் மின்மயமாக்க வேண்டும். வளர்ந்து வரும் நகரமயமாக்கல் காரணமாக வெப்பம் நிலை அதிகரித்து காணப்படுகின்றன. மனித ஆரோக்கியம் மற்றும் வாழ்வாதாரங்களில் மிகவும் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.

உலகின் மிக வேகமாக வெப்பமடையும் கண்டமான ஐரோப்பா, இத்தாலியின் சிசிலி மற்றும் சார்டினியா தீவுகளைத் தாக்கும் தற்போதைய வெப்ப அலை அதிகரித்து காணப்படுகின்றன. அங்கு அதிகபட்சமாக 48 டிகிரி செல்சியஸ் (118 டிகிரி பாரன்ஹீட்) இருக்கும் என ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.