தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம், எதிர்கட்சிகளின் ‘இந்தியா’ அணி ஆலோசனைக் கூட்டம் ஆகியவை நடந்து முடிந்துள்ள நிலையில் தமிழக அரசியலிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்துக்கு தமிழ்நாட்டிலிருந்து அதிமுக சார்பாக
அழைக்கப்பட்டார். இந்த கூட்டத்துக்கு தனக்கு அழைப்பு வரவில்லை என்று ஓபிஎஸ் கூறினார். எடப்பாடி பழனிசாமியை அழைத்ததோடு தனக்கு அருகில் மோடி அமரவைத்தது ஓபிஎஸ் தரப்புக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியின் ஒவ்வொரு வார்த்தைக்கும் கட்டுப்பட்டு செயலாற்றினோம், ஆனால் நமக்கு அழைப்பு இல்லையே என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லி புலம்பியுள்ளாராம். டெல்லிக்கு தனது கோபத்தை காட்டும் விதமாகவே பொது சிவில் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
ஓபிஎஸ்ஸின் அதிருப்தியை போக்கவும், எடப்பாடி பழனிசாமிக்கு செக் வைக்கும் விதமாகவும், நாடாளுமன்ற அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.
“ஓ.பி.எஸ் எங்களோடு இணைவார்” அடித்து சொல்லும் எஸ்.ஆர் சேகர் பாஜக
டெல்லி மனது வைத்தாலும் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனை கூட்டணிக்கு கொண்டு வருவதை எடப்பாடி பழனிசாமி விரும்ப மாட்டார். கடைசி நேரத்தில் டெல்லி எடப்பாடி பழனிசாமியின் பேச்சைக் கேட்கவே வாய்ப்புகள் உள்ளன.
எனவே டிடிவி தினகரனுடன் இணைந்து வேறு சில சிறிய கட்சிகளையும் இணைத்துக் கொண்டு மூன்றாவது அணியை அமைக்கலாமா என்று தனது ஆதரவாளர்களிடம் யோசனை கேட்டுள்ளாராம் ஓபிஎஸ். இது அவர்களுக்கு மிகுந்த ஆச்சரியத்தை தந்துள்ளதாம். பொதுக்கூட்டம், மாநாடு நடத்தவே வேறு யாரிடமாவது பொறுப்பை ஒப்படைத்து நழுவிக்கொள்ளும் ஓபிஎஸ் தனி அணி அமைக்க, அதற்கு செலவழிக்க தயாராக இருப்பாரா என்பது தான் அவர்களது ஆச்சரியத்துக்கு காரணமாம்.
இப்படியொரு சூழல் ஏற்படாது என்று சொல்வதற்கில்லை. எனவே அமமுக,
, எஸ்டிபிஐ ஆகிய கட்சிகளுடன் இணைந்து அணி அமைப்பதற்கான அத்தனை வாய்ப்புகளும் இருக்கின்றன என்று கூறுகின்றனர் அரசியல் விமர்சகர்கள்.