சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றிருக்கிறது.
இந்நிலையில் இப்படத்தின் வெற்றிவிழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிவகார்த்திகேயன் பங்கேற்று ரசிகர்களுக்கு தனது நன்றியை தெரிவித்திருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், “ நிறைய வெற்றி படங்கள் பண்ணிருக்கேன். ஆனால் மாவீரனின் வெற்றி எனக்கு ரொம்ப ஸ்பெஷல். இந்தபடத்தில நிறைய ஆக்ஷன் மற்றும் எமோஷனல் சீன் இருக்கிறது.

இது எல்லாத்தையும் நான் நன்றாக பண்ணுவேன் என்று என்மேல் நம்பிக்கை வைத்த மடோன் அஸ்வினுக்கு நன்றி. சில வருடத்துக்கு முன்னாள் ஒரு படம் பண்ணியிருந்தேன். அப்போது விகடனில் இருந்து எனக்கு வந்த விமர்சனம் வெறும் கெட்டப் மாற்றுவது எல்லாம் ஒரு நடிப்பா? என்று. ஆனால் இப்போது விகடனில் இருந்து ‘வெல்டன்’ SK என்று விமர்சனம் வந்திருக்கிறது. இதை நான் ஒரு மோட்டிவேட்டாகப் பார்க்கிறேன். இயக்குநர் மடோன் அஸ்வின் விரும்பினால் அவருடன் மேலும் ஒரு படத்தில் இணைந்து பணியாற்றத் தயாராக இருக்கின்றேன் என்று தெரிவித்திருக்கிறார்.
இதனைதொடர்ந்து பேசிய சிவகார்த்திகேயன், ” எனக்கு விஜய் சேதுபதியுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை நிறையவே இருக்கிறது. அதுவும் கூடிய சீக்கிரம் நடக்கும் என்று நம்புகிறேன். அவருக்கும் எனக்கும் போட்டி என்பதே கிடையாது. அவரது நடிப்பை நான் அவ்வளவு ரசிக்கிறேன். அதனை வார்த்தையால் சொல்லிக் கொண்டே இருந்தேன். திரையில் அவருடன் சேர்ந்து நடிப்பது விரைவில் நடக்கும்” என்று கூறியிருக்கிறார்.