புதுடில்லி, ராஜ்யசபா துணைத் தலைவர்கள் குழுவில், 50 சதவீத இடங்களை பெண்களுக்கு ஒதுக்கி, ராஜ்யசபா தலைவர் ஜக்தீப் தன்கர் உத்தரவிட்டு உள்ளார்.
பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடர் நேற்று துவங்கியது. ராஜ்ய சபாவில், அதன் தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஜக்தீப் தன்கர் புதிய அறிவிப்பை வெளியிட்டார்.
அவர் கூறியுள்ளதாவது:
தலைவர் அல்லது துணை தலைவர் சபையில் இல்லாத நேரத்தில், ராஜ்யசபாவை வழிநடத்துவதற்கான துணை தலைவர்கள் குழு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
முதல் முறையாக இந்தக் குழுவில் உள்ள எட்டு பேரில், நான்கு பேர் பெண்கள். இந்த நான்கு பேரும் முதல் முறையாக எம்.பி.,யாக பதவியேற்றவர்கள்.
இதன்படி, பா.ஜ.,வின் பி.டி. உஷா, பாங்க்னான் கோன்யாக், தேசியவாத காங்.,கின் பவுசியா கான், பிஜு ஜனதா தளத்தின் சுலாடா தியோ இதில் இடம்பெறுகின்றனர்.
இவர்களைத் தவிர, ஒய்.எஸ்.ஆர்.காங்.,கின் விஜய்சாய் ரெட்டி, பா.ஜ.,வின் கியான்ஷியாம் திவாரி, திரிணமுல் காங்.,கின் சுகேந்து சேகர் ராய், காங்.,கின் எல்.ஹனுமந்தய்யா ஆகியோரும் இதில் இடம்பெறுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement