வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பீய்ஜிங்: சீன வெளியுறவு அமைச்சர் குய்ன் காங்., திடீரென காணாமல் போன சம்பவம் அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீன அதிபராக ஜிஜிங்பிங்க உள்ளார். இவரது அமைச்சரவையில் வெளியுறவு அமைச்சராக இருப்பவருபவர் குய்ன் காங்.,56 இவர் கடந்த மாதம் 24 ம் தேதி முதல் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமலும், செய்தியாளர்களை சந்திக்காமலும், அதிபரின் ஆலோசனை கூட்டங்களில் பங்கேற்காமல் இருந்துள்ளார்.இதையடுத்து அவர் காணமால் போய்விட்டதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்தியாக வெளியாகி பரபரப்பு உருவாகி உள்ளது.
![]() |
அவர் எங்கிருக்கிறார் எங்கே போனார் என உறுதியான தகவல் வெளியாகவில்லை. வெளிநாடு சென்றிருந்தால் அதிபரின் அனுமதியுடன் சென்றிருக்கலாம். அதுவும் இல்லை. இந்நிலையில் காணாமல் போன வெளியுறவு அமைச்சர் இளம் பெண் ஒருவருடன் இருப்பது போன்ற கடைசி வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement