Vijay Deverakonda: ரசிகரின் செயலால் மேடையிலிருந்து பதறியடித்து ஓடிய விஜய்: தீயாய் பரவும் வீடியோ.!

‘அர்ஜுன் ரெட்டி’ படம் மூலம் தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் விஜய் தேவரகொண்டா. இவர் தெலுங்கு, இந்தி மற்றும் தமிழ் படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான ‘லைகர்’ படம் படு தோல்வியை சந்தித்தது. அத்துடன் பாக்ஸ் ஆபிஸிலும் இந்தப்படம் பலத்த அடி வாங்கியது.

இந்நிலையில் விஜய் தேவரகொண்டாவின் வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அண்மையில் சாய் ராஜேஷ் நீலம் இயக்கத்தில் வெளியான படம் ‘பேபி’. இந்தப்படத்தில் விஜய் தேவரகொண்டாவின் தம்பி ஆனந்த் ஹீரோவாக நடித்துள்ளார். வைஷ்ணவி சைதன்யா, நாகேந்திர பாபு உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இந்தப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று ரூபாய் 38 கோடி வரை வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்நிலையில் இந்தப்படத்தின் சக்சஸ் மீட் ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட விஜய் தேவரகொண்டா, மேடையில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென ரசிகர் ஒருவர் மின்னல் வேகத்தில் மேடையில் ஏறி, விஜய் காலில் விழ முயற்சித்தார். இதனை கொஞ்சமும் எதிர்பார்க்காத விஜய், பதறியடித்து பின்வாங்கி ஓடினார்.

இதனையடுத்து மேடையிலிருந்து அந்த ரசிகரை பாதுகாவலர்கள் அழைத்து சென்றனர். இந்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் தீயாய் பரவி வருகிறது. விஜய் தேவ்ரகொண்டா தற்போது ‘குஷி’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். சிவா நிர்வாணா இயக்கத்தில் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் இந்தப்படம் உருவாகியுள்ளது.

Ajith: டிராப் ஆன ‘ஏகே 62’ படம் குறித்து சந்தானம் பகிர்ந்த சூப்பரான மேட்டர்: ரசிகர்கள் வருத்தம்.!

லவ் ஸ்டோரியாக தயாராகியுள்ள இந்தப்படத்தில் சமந்தா ஹீரோயினாக நடித்துள்ளார். சமீபத்தில் இதன் படப்பிடிப்பை முழுமையாக நிறைவு செய்துள்ளனர் படக்குழுவினர். ஏற்கனவே இந்தப்படத்தின் இரண்டு சிங்கிள்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. ‘குஷி’ படம் வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இதனை தொடர்ந்து விஜய் தேவரகொண்டா தற்போது நடித்து வரும் ‘VD13’ படத்தினை பரசுராம் இயக்கவுள்ளார். ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் வெளியான ‘கீதா கோவிந்தம்’ படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றது. இதனையடுத்து தற்போது இரண்டாவது முறையாக இந்த கூட்டணி இணைந்துள்ளது. தில் ராஜு, சிரிஷ் தின் இணைந்து தயாரிக்கும் இந்தப்படத்தில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக மிருணாள் தாகூர் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Maaveeran: விஜய் சேதுபதியுடன் நடிக்க காத்திருக்கிறேன்: ‘மாவீரன்’ சிவகார்த்திகேயன்.!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.