சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன கோரிக்கை

தற்போது இடம்பெறும் ஒவ்வொரு மரணமும் தடுப்பு மருந்திற்கு அல்லது மயக்க மருந்துடன் தொடர்புபடுத்தும் நிகழ்ச்சி நிரல் நடைமுறைப்படுத்தப்படுவதுடன், சுதந்திர சுகாதார சேவையை அனுபவிக்கும் நபர்களாக உண்மையை உறுதிப்படுத்தாது அதனை செலுத்த வேண்டாம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார்.  

இதன்போது, சுதந்திர சுகாதார சேவைகள் பல ஆண்டுகளாக நாட்டில் அனுபவிக்கப்படுவதாகவும், சுதந்திரக் கல்வியான வருகை தந்த நபர்களாக நாடு சுதந்திர சுகாதார சேவையைப் பாதுகாக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சில் (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்தார்.

சுகாதாரத் துறையில் மனித சுதந்திர சுகாதார சேவையைப் பாதுகாப்பதற்கு செயற்படுவதாகவும், உண்மையை மறைப்பதற்கு எவ்வித எண்ணமும் இல்லை எனவும், சரியான தகவல்களை சரியாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டார்.

 பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தொடர்ந்து உரையாற்றுகையில்,

“களுத்துறை நாகொட வைத்தியசாலையில் மயக்கத்திற்காக வழங்கும் மருந்து இல்லை எனவும், கர்ப்பிணத் தாய்மார்களை வேறு வைத்தியசாலைகளுக்கு மாற்றுவதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இம்மருந்து வைத்தியசாலையில் பற்றாக்குறையாகக் காணப்படுவதாக பணிப்பாளர் கடந்த 19ஆம் திகதி அறிவித்தார். அதன்போது அம்மருந்து நேற்று (20) சிகிச்சை வழங்கும் பிரிவிற்கு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும்  தெரியப்படுத்தினார். 

வைத்தியசாலையில் காணப்பட்ட மயக்க மருந்து 17இற்கு மேலதிகமாக 50 மானியமாக அந்த வைத்தியசாலைக்கு கிடைக்கப்பெற்றது. நேற்றிரவு (19) வரை சம்பந்தப்பட்ட மயக்க மருந்து 67 வைத்தியசாலையில் காணப்பட்டது. பின்னர் சிகிச்சை வழங்கும் பிரிவிற்குக் கிடைக்கப்பெற்ற சம்பந்தப்பட்ட மருந்து தற்போது களுத்துறை வைத்தியசாலைக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கிணங்க களுத்துறை வைத்தியசாலையில் அம்மருந்துத் தட்டுப்பாடு முடிவடைந்துள்ளது. இம்மருந்தினால் எந்தவொரு கர்ப்பிணித் தாயும் வைத்தியசாலைக்கு பொறுப்பெடுக்கப்படாது இருக்கவில்லை”.

கேகாலை வைத்தியசாலையில்  Cefriaxone நுண்ணுயிர் எதிர்ப்பி மருந்துகளை வழங்குவதனால் ஏற்பட்டுள்ள ஒவ்வாமை மிக்க நோயாளியொருவர் உயிரிழந்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நோயாளி கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய்த் தன்மை காரணமாக கேகாலை வைத்தியாசலைக்குஇம்மாதம் 10ஆம் திகதி அனுமதிக்கப்பட்டு 18ஆம் திகதி மரணித்தார். அதனை நியாயப்படுத்தவில்லை. 

இந்நோயாளிக்கு ஒவ்வாமை ஏற்படுவதற்கு முன்பே 14 தடவைகள் நுண்ணுயிர் எதிர்ப்பி மருந்து வழங்கப்பட்டுள்ளது. 15ஆவது தடவையே ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. ஒவ்வாமையின் பின்னர் குணமடைந்திருந்த அவரின் நோய் அதிகரித்ததனால் வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவிற்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு நோயாளியின் அதிகரித்த நோயினால் மரணமடைந்துள்ளார். இது தொடர்பாக வெளிப்படையான தீர்வொன்று வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திடீர் மரண விசாரணை இடம்பெற்றுள்ளது. அதன் முடிவுகள் வெளியானதும் அந்நோயாளியின் மரணத்திற்காக சரியான காரணத்தை அறிவிக்க முடியும்.”

“நாட்டின் போசனைக்குறைபாட்டு நிலை தொடர்பான ஊடக அறிக்கை இன்று (20)வெளியாகியுள்ளது. 05 வயதிற்குக் குறைந்த சிறுவர்களின் மற்றும் தாய்மாரில் 8இலட்சம் பேருக்கு போசனைக் குறைபாடு காணப்படுவதாக இதன் அடிப்படையிலான 2022இல் மேற்கொண்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஜூன் மாதம் தான் போசனை மாதமாகவிருந்தது. அந்தத் தரவுகளின் பகுப்பாய்வு தற்போது நடைபெறுகின்றது. ஜூலை மாத இறுதியளவில் சரியான தகவலை வழங்க முடியும்”.

வெளிநாடுளில் பதிவு செய்யப்பட்ட ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையில்  மருந்துகளையே நாட்டிற்குக் கொண்டு வருகிறோம். பொருத்தமான மருந்துகளை வரவழைத்த பின்னர் அதன் தரம், குறையும் தன்மையை வெளிப்படுத்தும் நிலையை இதற்கு முன்னைய பல வருடங்களில் இனம் கண்டுள்ளோம். 2017 இல் 93, 2018 இல் 85, 2019 இல் 96, 2020 இல் 77, 2021இல் 85, 2022 இல் 86, 2023 இல் தற்போது வரை 83 தரம் குறைந்த மருந்துகள் காணப்பட்டுள்ளன. இவ்வருடத்தில் மாத்திரம் இது நிகழவில்லை.

நாம் சுகாதாரத் திணைக்களத்தின் ஒழுங்குவிதிகளுக்கு தரமற்ற மருந்துகளை வரவழைத்து, நோயாளிகளுக்கு வழங்குவதில்லை. சுகாதார சேவை எதிர்காலத்திலும் சரியான முறையில் இடம்பெறும். எவரேனும் அரசாங்க வைத்தியசாலைக்கு வருவதற்குப் பயப்பட வேண்டாம். சுதந்திர சுகாதார மற்றும் சுதந்திரக் கல்வியை நாம் பாதுகாக்க வேண்டும்”.

ஒவ்வாமை உடைய மருந்துகள் என்றாலும் இந்நிலை ஏற்படலாம் பேராதனையில் அண்மையில் இடம்பெற்ற சம்பவத்தின் பின்னர் இலங்கையின் சகல வைத்தியசாலை பணிப்பாளர்கள், மருத்துவ அதிகாரிகள் மற்றும் வைத்தியசாலைகளின் பிரதானிகளுடன்  நிலைமை தொடர்பாகவும், தாம் முகம் கொடுக்கும் விதம் குறித்தும்  கலந்துரையாடினோம். 

சுகாதாரத் திணைக்களத்தின் பிரபலமான வைத்தியசாலைகளில்   ஒன்றில் இவ்வாறான அசாதாரண நிலைமை ஏற்படுவதால், ஒவ்வொரு நோயாளியையும் பாதுகாக்க வேண்டியுள்ளது.  அனைத்து  விசேட வைத்தியர்களின் சங்கம் சுகாதார அமைச்சுடன் இணைந்து எதிர்வரும்    24ஆம் திகதியிலிருந்து சகல வைத்தியசாலைகளிலும் அவசர சிகிச்சை தொடர்பாக வாரம் முழுவதும் அறிவிப்பதற்கு, அவசியமான நடவடிக்கை குறித்து கலந்துரையாடி உள்ளோம்.

கிராமப்புற வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் மற்றும் தாதிகள் வரை இந்த நிகழ்ச்சி திட்டத்தை மேற்கொள்வதற்கு நாம் எதிர்பார்க்கிறோம்.”   என்றும்  சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தொடர்ந்தும் அசேல குணவர்தன  தெளிவுபடுத்தினார். 

இந்நிகழ்வில் பிரதிப் பணிப்பாளர் நாயகமும் சீமாட்டி  ரிட்ஜ்வே வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஜி. விஜேசூரிய மற்றும் சிகிச்சை  வழங்கல் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் நாயகன் பைத்தியர் டி. ஆர். கே. ஹேரத்  என   ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.