"போட்டித் தேர்வுகளுக்கு பொறுமை மிகவும் அவசியம்"- சத்யஶ்ரீ பூமிநாதன்

ஆனந்த விகடன் மற்றும் King maker IAS அகாடமி இணைந்து நடத்தும் இலவச பயிற்சி முகாம் மற்றும் ஓராண்டு இலவச பயிற்சிக்கான ஸ்காலர்ஷிப் தேர்வு வருகிற ஜுலை 30 ஆம் தேதி திருச்சியில் நடக்கவிருக்கிறது.

UPSC/TNPSC

காலை 9 மணிக்கு தொடங்கும் இந்தப் பயிற்சி முகாம் மதியம் 1:30 மணி வரை திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் நடைபெறும். இந்தப் பயிற்சி முகாமில் மாணவர்களுக்காக உரையாற்றுவதற்கு திருச்சி மாவட்டத்தின் ஆட்சியர் மு.பிரதீப் குமார் (IAS), திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்தியபிரியா (IPS), வருமான வரித்துறை கமிஷ்னர் நந்தகுமார் (IRS) மற்றும் ஊக்க உரையளிக்க King maker IAS அகாடமியின் இயக்குநர் சத்யஶ்ரீ பூமிநாதன் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

இந்த பயிற்சி முகாம் தொடர்பாக King maker IAS அகாடமியின் இயக்குநர் சத்யஶ்ரீபூமிநாதன்,”கல்லூரி காலம் முடிந்த பிறகு அரசு பணிகளில் சேர வேண்டும் என்று ஆர்வமுள்ளவர்கள் முதலில் UPSC/TNPSC தேர்வுகளை எழுத வேண்டும். பல அரசுப் பணிகள் இருந்தாலும் UPSC/TNPSC தேர்வுகளை எழுதுவது சிறப்பானது.எதிர்காலங்களில் ஆளுமைகளாக வருவதற்கு UPSC/TNPSC தேர்வுகள் அடித்தளமாக அமையும். இந்தத் தேர்வுகளின் மூலம் மாணவர்கள் இந்தியாவின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக திகழ்வார்கள். கல்லூரி காலங்களிலேயே மாணவர்கள் UPSC/TNPSC தேர்வுகளுக்கு ஆயத்தமாகுவதற்கு King maker IAS அகாடமி வழியமைக்கிறது.பள்ளிப் படிப்பை படித்துக் கொண்டிருப்பவர்களும் இது போன்ற பயிற்சி முகாம்களில் கலந்து கொண்டால் அவர்களின் எதிர்காலத் திட்டங்களுக்கு உதவும். IAS, IRS, IPS போன்ற அதிகாரிகள் இந்தப் பயிற்சி முகாம்களில் கலந்து கொண்டு உரையாற்றும் போது மாணவர்களுக்கு அதிகாரிகளின் வெற்றி ஊக்கமளிக்கும். தமிழில் பயின்று இந்த போட்டித் தேர்வுகளில் வென்று அதிகாரிகளாக உயர்ந்திருக்கிறார்கள். அதற்கு சான்று மணிகண்டன் ஐ.ஏ.எஸ் . இவர் முன்னாள் King maker IAS அகாடமியின் மாணவர். ஆகையால் மொழி என்பது போட்டித் தேர்வுகளுக்கு தடையாக அமையாது.

boominathan

கேள்வித்தாள்கள் ஆங்கிலத்தில் இருந்தாலும் பதில்களை நாம் தமிழில் எழுத முடியும். TNPSC குரூப்-1 தேர்வுக்கு கேள்வித்தாள்கள் தமிழிலும் அமைதிருக்கும் . ஆதலால் மாணவர்கள் பயப்பட வேண்டிய அவசியமிருக்காது. கிராமப் புறம், நகர்ப்புறம், முதல் தலைமுறை பட்டதாரி என்கிற எந்த பின்புலமும் மாணவர்களுக்கு தடையாக அமையாது. சரியான வழிகாட்டலும் முயற்சியும் இருந்தால் எவரும் ஐ.ஏ.எஸ் ஆகலாம். மேலும் பொறுமை என்பது இந்தப் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்பவர்களுக்கு மிகவும் அவசியம். குறுகிய நேரத்தில் வெற்றி பெற்றுவிடலாம் என்று எவரும் நினைக்க கூடாது. திறமையுடன் சேர்ந்து பொறுமையுடன் இந்த தேர்வை அணுகுபவர்களுக்கு வெற்றி நிச்சயம். பல திறமை வாய்ந்தவர்களும் பொறுமையின்றிதான் வெற்றியை தவற விடுகிறார்கள். இந்தாண்டு மட்டும் King maker IAS அகாடமியில் பயின்ற 151 மாணவர்கள் சிவில் சர்வீஸ் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்தாண்டு இந்தியளவிலான தரவரிசையில் முதல் இடம் பிடித்த மாணவி ‘சீதா கிஷோர்’ , King maker IAS அகாடமியின் நேர்முகத் தேர்வு பயிற்சியில் கலந்து கொண்டவர். King maker IAS அகாடமி மாணவர்களுக்கு முன்னாள் UPSC சேர்மன் நேரடியாக நேர்முக தேர்விற்கு பயிற்சிக் கொடுக்கிறார்.” என ஊக்கமளிக்கும் வகையில் பேசி விடைபெற்றார்.

முன்பதிவு லிங்க் கீழே

Loading…

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.