ராகுல் காந்தி வழக்கு – உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

அவதூறு வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்திருந்தார். இந்த நிலையில், இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனுவுக்கு பதிலளிக்க புர்னேஷ் மோடிக்கும், குஜராத் அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. இது தொடர்பாக இரண்டு வாரங்களில் பதிலளிக்கவும் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறுத்திவைக்க கோரிய மேல்முறையீடு மனு மீதான விசாரணை ஆகஸ்ட் 4-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.
மாநிலங்களவை மதியம் 2:30 வரை ஒத்திவைப்பு

மணிப்பூரில் பெண்கள் நிர்வாணமாக்கப்பட்ட விவகாரம் உலக நாடுகளை உற்றுநோக்க வைத்திருக்கிறது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த விவகாரம் தொடர்பாக குரலெழுப்பி வருகின்றன. இந்த நிலையில், மணிப்பூர் கலவரம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி-க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, மாநிலங்களவை மதியம் 2:30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.
டெல்லியில், பிரதமர் மோடியுடன் இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க சந்திப்பு
