வாஷிங்டன்:இந்திய எல்லையில் சீனாவின் அத்துமீறல்களை தடுப்பதற்கு தேவையான நீட்டிக்கப்பட்ட பீரங்கி மற்றும் காலாட்படை வாகனங்களை இந்தியாவுடன் இணைந்து தயாரிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து, அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனின், இந்தோ – -பசிபிக் பாதுகாப்பு விவகாரங்களுக்கான உதவி செயலர் எல்லி ராட்னர் கூறியதாவது:
பிரதமர் நரேந்திர மோடியின் சமீபத்திய அமெரிக்க பயணத்தின்போது, ‘ஜெட் இன்ஜின்’களை இணைந்து தயாரிப்பதற்கும், அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு தொழில்துறை ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் நாங்கள் உறுதியளித்தோம்.
இந்திய எல்லையில், சீனாவின் அத்துமீறல்களை சமாளிக்க தேவையான நீட்டிக்கப்பட்ட பீரங்கி மற்றும் காலாட்படை வாகனங்களை இந்தியாவுடன் இணைந்து தயாரிப்பதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement