சென்னை: சிவா மனசுல சத்தி என்ற வெற்றிப்படத்தில் நடித்த நடிகை அனுயா பகவத் அடையாளமே தெரியாத அளவுக்கு மாறி இருக்கிறார்.
நடிகை அனுயா அறிமுகமானது என்னமோ இந்தி திரைப்படமாக இருந்தாலும், அதன் பின் தமிழ் சினிமா ஏராளமான திரைப்படங்களில் நடித்திருந்தார்.
அந்த வகையில் சிவா மனசுல சக்தி, மதுரை சம்பவம், நகரம், நஞ்சுபுரம், நான், நண்பன் போன்ற பல படங்களில் டாப் நடிகர்களுடன் நடித்திருந்தார்.
சிவா மனசுல சக்தி: அனுயா பகவத் ஏராளமான திரைப்படங்களில் நடித்திருந்தால், சிவா மனசுல சக்தி என்ற படம் தான் இவருக்கு பெயர் சொல்லும் திரைப்படமாக அமைந்தது. ஜீவா, சந்தானம் நடிப்பில் 2009ம் ஆண்டு வெளியான இத்திரைப்படத்தை எம் ராஜேஷ் இயக்கி இருந்தார். இளைஞர்கள் மத்தியின் ட்ரெண்ட் செட்டராக அமைந்த இப்படத்தின் நகைச்சுவை காட்சிகள் மற்றும் பாடல்கள் இன்றும் பேசப்பட்டு வருகிறது.

சர்ச்சையில் சிக்கினார்: இந்த படத்திற்கு பின் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த அனுயா பகவத்தின் நிர்வாண படங்கள், வீடியோக்களை பாடகி சுசித்ரா ட்விட்டரில் வெளிட்டார். பாடகி சுசித்ரா பல நடிகர்கள் நடிகைகள் குறித்து வீடியோவை வெளியிட்டார். சர்ச்சையில் சிக்கிய நடிகைகள் பலரும் அது நான் இல்லை என மறுப்பு தெரிவித்து வந்தார்கள்.ஆனால் அனுயா அந்த புகைப்படத்தை கலைநயத்துடன் பார்க்கவேண்டும் தவறான கண்ணோட்டத்தில் பார்த்தால் தவறாகத்தான் தெரியும் என்று விளக்கம் கொடுத்து மாட்டிக்கொண்டார்.

ஓவர் வெயிட்: அதன்பின் நடிகை அனுயாவிற்கு படவாய்ப்பே இல்லாமல் போனதால், தனது திறமைக்கும் அழகுக்கும் பட வாய்ப்புகள் கிடைக்கும் என கருதி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படத்தை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார் அனுயா பகவத். சிவா மனசுல சக்தி படத்தில் செம க்யூட்டாக இருந்த அனுயா தற்போது ஓவர் வெயிட் போட்டு ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி இருக்கிறார். இவர் தாறுமாறாக வெளியிட்ட கவர்ச்சி புகைப்படத்தால் இந்தி வெப் தொடரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.