வெளிநாடுகளுக்கு பறக்கும் இந்தியர்கள்: குடியுரிமைக்கும் குட் பாய் சொன்ன 17.5 லட்சம் பேர்!

இந்திய மக்கள் கல்வி, வேலைவாய்ப்புக்காக வெளிநாடுகளுக்கு செல்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அவ்வாறு செல்பவர்கள் அந்தந்த நாடுகளின் குடியுரிமையை பெறுவதோடு துரதிர்ஷ்டவசமாக இந்திய நாட்டு குடியுரிமையையும் திரும்ப ஒப்படைத்து வருகின்றனர்.

இந்த ஆண்டில் ஜூன் மாதம் வரை மட்டும் 87,026 இந்தியர்கள் தங்கள் குடியுரிமையைத் துறந்ததாக வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

2011 முதல் இதுவரை 17.50 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்திய குடியுரிமையை கைவிட்டுள்ளனர் என்று அதிர்ச்சிகரமான விவரத்தை எஸ் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

சிவ்தாஸ் மீனா மீண்டும் எடுத்த டிரான்ஸ்பர் ஆயுதம்: இந்த முறை மொத்தம் நான்கு பேர்!

ஒவ்வொரு ஆண்டும் இந்திய குடியுரிமையை துறப்பவர்களின் எண்ணிக்கை

2020ஆம் ஆண்டில் கொரோனா பொது முடக்கம் காரணமாக உலகமே முடங்கியிருந்ததால் அந்த ஆண்டு மட்டும் சற்று குறைவானவர்கள் தங்கள் குடியுரிமையை துறந்துள்ளனர். அதைத் தவிர்த்து ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் தங்கள் குடியுரிமையை துறக்கின்றனர். இந்த ஆண்டில் ஜூன் மாதம் வரையான தரவுகள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன. இந்த டிசம்பர் வரையான கணக்கை பின்னர் சேர்க்கும் போது இந்த ஆண்டின் எண்ணிக்கையும் ஒன்றரை லட்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் நாட்டின் சொத்து என்று எஸ்.ஜெய்சங்கர் கூறியுள்ளார். கடந்த இரு பத்தாண்டுகளில் உலகளாவிய பணியிடத்தை ஆராயும் இந்தியர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க வகையில் உள்ளதாக உள்ளது. அவர்களில் பலர் தனிப்பட்ட வசதிக்காக வெளிநாட்டுக் குடியுரிமையைப் பெறத் தேர்ந்தெடுத்துள்ளதாக அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

வெளிநாட்டில் குடியேறுபவர்கள் பெரும்பாலும் அமெரிக்காவை தங்கள் இலக்காக கொண்டுள்ளனர். 2021 வரையான தரவுகளின் அடிப்படையில் இந்திய குடியுரிமையை துறந்தவர்களில் 7,88,284 பேர் அமெரிககவில் குடியேறியுள்ளனர்.

அதற்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவில் 23,533 பேரும், கனடாவில் 21,597 பேரும், இங்கிலாந்தில் 14,637 பேரும் குடியேறியுள்ளனர்.

இந்தியாவில் பிறந்து வளர்ந்து வேலை நிமித்தம், கல்வி நிமித்தம் வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் இந்தியாவின் சொத்துக்கள் தான். அவர்களின் அறிவும், செல்வமும், அனுபவமும் இந்தியாவுக்கு பயன்படாமல் போவது துரதிர்ஷ்டம் தான்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.