வாஷிங்டன்: அமெரிக்கக் கடற்படைத் தளபதியாக அட்மிரல் லிசா பிரான்செட்டி என்ற பெண்ணை அதிபர் ஜோ பைடன் தேர்வு செய்துள்ளார்.
நியமனம் அமலுக்கு வரும் பட்சத்தில், அட்மிரல் பதவியை வகிக்கும் முதல் பெண் என்ற வரலாற்றுப் பெருமையைப் பெறுவார் லிசா. கடற்படையில் வழிகாட்டும் ஏவுகணைகள் மற்றும் போர்க்கப்பல்களை இயக்குதல் ஆகியவற்றில் லிசா திறம்பட பணியாற்றி உள்ளார்.
கடற்படைத் தளபதி அட்மிரல் மைக் கில்டேயின் நான்கு ஆண்டு பதவிக்காலம் முடிவடையும் நிலையில், அடுத்த இடத்தில் உள்ள லிசா உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement