HBD Yogibabu: உன்ன ஏன்பா இப்படி கிண்டல் பன்றாங்க..படம் பார்த்து கதறி அழுத தாய்..ஆறுதல் சொன்ன யோகி பாபு..!

தமிழ் சினிமாவில் தற்போது டாப் நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் தான் யோகி பாபு. தற்போது வெளியாகும் படங்களில் யோகி பாபு இல்லாத படம் எது என கேட்டால் அதை விறல் விட்டு எண்ணிவிடலாம். அந்த அளவிற்கு யோகி பாபு பல படங்களில் நடித்து வருகின்றார். நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல் யோகி பாபு கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வருகின்றார்.

அதற்கும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகின்றது. இந்நிலையில் சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் படத்தில் யோகி பாபு தன் சிறப்பான நகைச்சுவையை வெளிப்படுத்தி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார். மேலும் படத்தின் வெற்றிக்கு அவரின் காமெடி மிகமுக்கிய காரணமாகவும் அமைந்துள்ளது.

கதறி அழுத தாய்

இதையடுத்து ரஜினியின் ஜெயிலர் உட்பட பல படங்களில் தற்போது யோகி பாபு செம பிசியாக நடித்து வருகின்றார். இந்நிலையில் இன்று யோகி பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு திரைபிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் அவரை பற்றிய பல தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன.

Maaveeran: ஒட்டுமொத்தமாக மாவீரன் படம் செய்த வசூல்..தனுஷை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்த சிவகார்த்திகேயன்..!

அந்த வகையில் யோகி பாபு அவரின் தாயுடன் படம் பார்க்க சென்ற ஒரு சம்பவம் தான் தற்போது வெளியாகியுள்ளது. என்னவென்றால் யோகி பாபு விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா என்ற நிகழ்ச்சியின் மூலம் தன பயணத்தை துவங்கினார். அந்நிகழ்ச்சியில் ஒரு ஓரமாக நின்றுகொண்டிருந்த யோகிபாபு படிப்படியாக முன்னேறி தன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார்.

இதையடுத்து படவாய்ப்புகளுக்காக பல ஆண்டுகள் முயற்சி செய்து வந்தார் யோகி பாபு. ஆனால் அவருக்கு ஒரு சில வாய்ப்புகள் மட்டுமே கிடைத்தது. இந்நிலையில் யாமிருக்க பயமேன் என்ற படத்தின் மூலம்தான் யோகி பாபு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அப்படத்தின் மூலம் தான் யோகிபாபுவிற்கு பல படவாய்ப்புகள் கிடைத்தது.

ஆறுதல் சொன்ன யோகி பாபு

எனவே தன் தாயுடன் யாமிருக்க பயமேன் என்ற படத்தை பார்க்க திரையரங்கிற்கு சென்றார் யோகி பாபு. அப்படத்தில் யோகி பாபுவை அனைவரும் பண்ணி மூஞ்சி வாயேன் என்றுதான் அழைப்பார்கள். இதைக்கேட்ட யோகி பாபுவின் தாய் திரையரங்கிலேயே கதறி அழுதுள்ளார்.

அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்

நீ அழகத்தான் இருக்க, அப்புறம் ஏன் உன்னை பண்ணி மூஞ்சி வாயேன் என சொல்றாங்க என கதறி அழுதுள்ளார் யோகி பாபுவின் தாய். இதையடுத்து இதெல்லாம் வெறும் நகைச்சுவைக்காக தான் அம்மா என கூறி தன தாய்க்கு ஆறுதல் சொல்லியிருக்கின்றார் யோகி பாபு.

இந்நிலையில் யோகி பாபு இன்று பாலிவுட் படத்தில் ஷாரூக்கானுடன் நடிக்கும் அளவிற்கு வளர்த்துள்ளார். இதைப்பார்த்து அவரது தாய் தற்போது மகிழ்ச்சியாக இருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.