சென்னை: சின்னத்தம்பி சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை பாவனி. பிக்பாஸ் சீசன் 5ல் இவர் இணைந்திருந்தார்.
ஏற்கனவே திருமணமாகி கணவனை இழந்த பாவனியை காதலிப்பதாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமீர் கூறி ஷாக் கொடுத்தார்.
இதையடுத்து சிறிது காலங்கள் அவரது காதலை ஏற்காத பாவனி தற்போது ஏற்றுள்ளார். இருவரும் ஒரு ஆண்டிற்கு பிறகு திருமணம் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கருப்பு -வெள்ளையில் புகைப்படங்களை பகிர்ந்த பாவனி: நடிகை பாவனி சின்னத்தம்பி என்ற சீரியல்மூலம் என்ட்ரி கொடுத்தவர். இவருக்கு இந்த சிரியல் சிறப்பாக கைக்கொடுத்த நிலையில், அடுத்ததாக பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். அங்கு தன்னுடைய திருமணம் மற்றும் தன்னுடைய கணவரின் தற்கொலை குறித்து பகிர்ந்துக் கொண்டார். இந்நிலையில் வைல்ட் கார்ட் மூலம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நுழைந்த அமீர், பாவனியுடன் தன்னுடைய காதலை வெளிப்படுத்தினார்.

இதனால் ஷாக்கான பாவனி, அவருடைய காதலை ஏற்காமல் இருந்தார். ஆனால் சிறிது காலத்திலேயே அமீரின் காதலை ஏற்றுக் கொண்டார். ஒரு வருடம் கழித்தே தங்களின் திருமணம் என்று இருவரும் கூட்டாக அறிவித்துள்ளார். அமீர் இயக்கத்தில் பாவனி நடிக்கும் புதிய படத்தின் பூஜையும் சமீபத்தில் போடப்பட்டது. இந்நிலையில் இவர்கள் இருவரும் ஒரே வீட்டில்தான் வாழ்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருவரின் திருமண புகைப்படமும் வெளியாகி ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது.
பாவனி தமிழ் பெண் போலவும் அமீர் முஸ்லீம் உடையிலும் இந்த புகைப்படத்தை காணப்பட்டனர். இதனிடையே பாவனி உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் புகைப்படங்களும் இன்ஸ்டாகிராமில் வெளியானது. அவரது உடல்நலம் தேற ரகிர்கள் பிரார்த்தனை மேற்கொண்டனர். அவரை உடனிருந்து அமீர் அக்கறையாக பார்த்துக் கொண்டார். இந்நிலையில் தற்போது கருப்பு -வெள்ளையில் தன்னுடைய புகைப்படங்களை பாவனி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

இந்தப் புகைப்படங்களில் மிகவும் ஸ்டைலிஷ்ஷாக பாவனி காணப்படுகிறார். அவர் சமந்தா போல உள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் செய்துள்ளனர். வித்தியாசமான பாணியில் இந்தப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. கண்களை போகஸ் செய்து பாதியாக சில புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இதேபோல இந்தப் புகைப்படங்களில் க்யூட்டான மற்றும் லேசான ஸ்மைலை பாவனி வெளிப்படுத்தியுள்ளது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
அமீரும் பாவனியும் இணைந்தே தங்களது கேரியரை சிறப்பாக்கி வருகின்றனர். இருவரும் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களிலும் அதிகமாக காணப்படுகின்றனர். அதன் புகைப்படங்களையும் பகிர்ந்து ரசிகர்களை குஷியாக்கி வருகின்றனர். தொடர்ந்து பல போட்டோஷுட்களை எடுத்து அதன் புகைப்படங்களை பாவனி தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார். இவரை இன்ஸ்டாகிராமில் 10 லட்சம் பாலோயர்கள் பாலோ செய்து வருகின்றனர்.
