அமராவதி:
நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை ஒட்டி அவருக்கு பேனர் கட்டிய ஆந்திராவை சேர்ந்த ரசிகர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சோகம் ஒரு பக்கம் இருந்தாலும், ஒரு சினிமா நடிகரை கடவுளுக்கு இணையாக வைத்து கொண்டாடும் அவலம் இந்தியாவில் என்றைக்கு முடிவுக்கு வரும் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.
நடிகர் சூர்யா தனது 48-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். தமிழ் சினிமாவில் நடித்தாலும் அவரது பல திரைப்படங்கள் வேறு பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு திரையிடப்படுவது வழக்கம். இதனால் அவருக்கு தமிழகத்தை தாண்டி கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் ரசிகர்கள் அதிகம். குறிப்பாக, அயன் திரைப்படம் தான் சூர்யாவை அகில இந்திய நட்சத்திரமாக உயர்த்தியது என்று சொல்லலாம்.
இந்நிலையில், இன்று சூர்யாவின் பிறந்தநாளை ஒட்டி தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்கள் பேனர்கள் கட்டியும், போஸ்டர்கள் ஒட்டியும் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். பல இடங்களில் சூர்யா ரசிகர்கள், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.
முதல் மனைவியின் இன்ஸ்டா ரீல்ஸை பார்த்த கணவன்.. ஆணுறுப்பை அப்படியே வெட்டிய மனைவி.. ஆந்திராவில் பகீர்
அந்த வகையில், சூர்யாவின் பிறந்தநாள் ஆந்திராவிலும் களைக்கட்டியது.இதன் ஒருபகுதியாக, ஆந்திர மாநிலம் போபுரிவாரிபாலம் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களான வெங்கடேஷ் மற்றும் சாய் ஆகியோர் நேற்று இரவு தனத நண்பர்களுடன் சேர்ந்து நரசாராவ்பேட்டையில் பேனர்களை கட்டிக் கொண்டிருந்தனர். அப்போது, பேனருக்கு பின்னால் இருந்த இரும்புக் கம்பி அங்கிருந்த மின் வயரில் உரசியது.
இதில் பேனருக்கு மேலே இருந்த வெங்கடேஷ் மற்றும் சாய் மீது மின்சாரம் பாய்ந்ததில் அவர்கள் தூக்கி வீசப்பட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே அவர்கள் இருவரும் உயிரிழந்தனர். இதுகுறித்து நரசராவ்பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.