கிரீஸ் தீவிற்கு சென்ற சுற்றுலா பயணிகள் அலறியடித்து ஓட்டம்… என்னமா எரியுது காட்டுத்தீ!

கோடை வெயிலை சமாளிக்க சுற்றுலா பயணிகள் பல்வேறு நாடுகளுக்கு பறந்த வண்ணம் இருக்கின்றனர். அதிலும் எங்கெல்லாம் சிறிய தீவுகள் இருக்கின்றன? என்பதை தேடி பிடித்து தங்களது பயணத்தில் சுவாரஸியத்தை கூட்ட திட்டமிடுகின்றனர். இதுபோன்ற தீவுகளில் பெரிய அளவில் மக்கள் நெரிசல் இருக்காது. சுற்றிலும் கடல் சூழ்ந்து அதிக மாசடையாத சுற்றுச்சூழலை பார்க்கலாம். நாலாபுறமும் குளிர்ச்சியான காற்று எப்போதும் கிடைத்து கொண்டே இருக்கும்.

சீன நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்த இலங்கை

ரோட்ஸ் தீவில் காட்டுத்தீ

இவ்வாறு கணக்கு போட்டு கிரீஸ் நாட்டை ஒட்டியுள்ள ரோட்ஸ் தீவிற்கு சென்றவர்கள் நிலை பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளது. ஏனெனில் அங்குள்ள வனப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இது வேகமாக பல இடங்களுக்கும் பரவி கொண்டிருக்கிறது. உலகின் வட துருவப் பகுதியில் கடந்த சில வாரங்களாகவே வெப்ப அலைகளின் தாக்கம் அதிகமிருக்கிறது. இதில் ஐரோப்பாவும் தப்பவில்லை.

ஐரோப்பாவில் தாங்க முடியாத வெப்பம்… தலைகீழாக மாறிய வானிலை… படாத பாடு படும் பொதுமக்கள்!

கடலோர கிராமங்களுக்கு ஆபத்து

அந்த வகையில் ரோட்ஸ் தீவில் கடந்த 6 நாட்களாக பற்றி எரியும் காட்டுத்தீயை அணைக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொளுந்து விட்டு எரியும் தீப்பிழம்பால் வீடுகள் மற்றும் விடுதிகளின் சுவர்கள் கருப்பாக மாறியுள்ளன. அங்கு சுற்றுலா சென்ற ஆயிரக்கணக்கான மக்கள் கடலோர கிராமங்களில் உள்ள விடுதிகளில் இருந்து அகற்றப்பட்டு பள்ளிகள் மற்றும் உள் விளையாட்டு அரங்குகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

முகாம்களுக்கு படையெடுப்பு

குறிப்பிட்டு சொல்ல வேண்டுமெனில் கியோடாரி, கென்னடி, பெஃப்கி, லிண்டோஸ், லார்டோஸ், கலதோஸ் ஆகிய கடலோர கிராமங்களை சொல்லலாம். ரோட்ஸ் தீவில் வசிப்பவர்களின் நிலையும் இதேதான். அரசு அளித்துள்ள தற்காலிக முகாம்கள் தஞ்சம் அடைந்தனர். சுமார் 5 ஆயிரம் பேர் வெவ்வேறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 19 ஆயிரம் பேர் தங்கள் வீடுகள் மற்றும் விடுதிகளை காலி செய்துவிட்டு வெளியேறியுள்ளனர்.
சிங்கப்பூர் பாஸ்போர்ட் இருக்கா உங்ககிட்ட? அப்ப நீங்க தான் ராஜா… விசா தேவையே இல்லயாம்!

கிரீஸில் 45 டிகிரி

இவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருமாறு ரோட்ஸ் தீவின் துணை மேயர் தனாசிஸ் விரினிஸ் தொலைக்காட்சி வாயிலாக கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. கிரீஸ் நாட்டை பொறுத்தவரை ஏற்கனவே 45 டிகிரி செல்சியஸை நோக்கி வெப்பநிலை நகர்ந்து கொண்டிருப்பதாக அச்சம் தெரிவிக்கின்றனர். ஐரோப்பாவின் தெற்கு பகுதி முழுவதும் வெப்ப அலைகளால் தடுமாறி வருகிறது.

வானிலை மையம் எச்சரிக்கை

கிரீஸில் காட்டுத்தீ என்பது வழக்கமான ஒன்று தானாம். ஆனால் அதீத வெப்பநிலை, வறட்சி, பலத்த காற்றுடன் கூடிய கோடைக்காலம் என்பது புதிது. கடந்த சில ஆண்டுகளில் இப்படியான மாற்றங்களை பார்க்க முடிவதாக உள்ளூர் மக்கள் கூறுகின்றனர். இதை வானிலை ஆய்வு மையமும் உறுதி செய்துள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.