சிம்பு ஆன்மிகப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறார்! – சந்தானம் வெளியிட்ட தகவல்

விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் சந்தானம். அவரை தான் நடித்த காதல் அழிவதில்லை என்ற படத்தில் காமெடியனாக நடிக்க வைத்தார் சிம்பு. அதன் பிறகு அவர்கள் மன்மதன், வல்லவன், வானம், ஒஸ்தி போன்ற படங்களிலும் இணைந்து நடித்தார்கள். மேலும், சமீப காலமாக காமெடியை ஓரங்கட்டிவிட்டு ஹீரோ டிராக்கில் பயணித்துக்கொண்டிருக்கிறார் சந்தானம். தற்போது அவர் நடித்துள்ள ‛டிடி ரிட்டன்ஸ்' என்ற படம் வருகிற ஜூலை 28ம் தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் தற்போது அவர் தீவிரமடைந்திருக்கிறார்.

இந்நிலையில் சிம்பு குறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், சிம்புவுக்கு எப்போதுமே கடவுள் நம்பிக்கை அதிகம். அதிலும் சமீபகாலமாக ஆன்மிக புத்தகங்களை அதிகமாக படிக்கிறார். இந்த அளவுக்கு அவர் ஆன்மிகத்தில் தீவிரமாகி விடுவார் என்று நானே எதிர்பார்க்கவில்லை. திருவண்ணாமலைக்கு அடிக்கடி சென்று சித்தர்களை சந்தித்து விட்டு வருகிறார். முன்பெல்லாம் நாங்கள் மீட் பண்ணிக் கொண்டால், ஜாலியாக பேசிக் கொண்டிருப்போம். ஆனால் இப்போது அவர் முழுக்க முழுக்க ஆன்மிகத்தை பற்றி மட்டுமே பேசுகிறார். அவரது பயணம் முழு ஆன்மிக பயணமாக மாறி இருக்கிறது என்கிறார் சந்தானம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.