வெறும் ரூ.9க்கு இத்தனை நன்மைகளா? அன்லிமிடெட் அழைப்பு, டேட்டா… பிஎஸ்என்எல் அசத்தல்

பிஎஸ்என்எல் ரூ. 769 ரீசார்ஜ் திட்டம்: நாட்டில் பல தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்த தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தங்கள் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், தக்க வைத்துக்கொள்ளவும் பல்வேறு புதிய ப்ரீபெய்ட், போஸ்ட்பெய்ட் மற்றும் பிராட்பேண்ட் திட்டங்களை கொண்டு வருகின்றன. குறைவான டேட்டா தேவைப்படும் நபர்கள், தினசரி டேட்டா வரம்புடன் வேலை செய்கிறார்கள். ஆனால் அதிக தரவு பயன்படுத்துபவர்களுக்கு அதிக டாட்டா தேவைப்படுகிறது. அந்த வகையில் இந்திய அரசாங்கத்தின் தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) அவ்வப்போது வாடிக்கையாளர்களுக்கு பல வித மலிவான ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்கிறது. பிஎஸ்என்எல்-ன் திட்டங்கள் மிக மலிவான விலையில் கிடைத்தாலும், இவற்றில் பல நல்ல அம்சங்களும் வசதிகளும் கிடைக்கின்றன. இந்திய தொலைத்தொடர்பு சந்தையில் பல தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இருந்தாலும், பிஎஸ்என்எல் மீது பயனர்களுக்கு அதிகப்படியான நம்பிக்கை உள்ளது. 

பிஎஸ்என்எல் ரூ.769 ப்ரீபெய்ட் திட்டம்
தமிழக வட்டார வாடிக்கையாளர்களுக்கு பிஎஸ்என்எல் (பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்) இந்த ரீசார்ஜ் திட்டத்தின் விலை ரூபாய் 769 ஆக இருக்கும். மேலும் இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்வதன் மூலம், நீங்கள் 84 நாட்களுக்கு மொத்த வேலிடிட்டியை பெறுவீர்கள். அத்துடன் தினசரி 100 எஸ்எம்ஸ், ஈரோஸ் நவ் என்டர்டெயின்மென்ட், லிஸ்ட்ன் பாட்காஸ்ட் சர்வீசஸ், ஹார்டி மொபைல் கேம் சேவை, லோக்துன் மற்றும் ஜிங் உள்ளிட்ட பல சலுகைகளையும் பெறுவீர்கள். மறுபுறம் இன்டர்நெட் சேவை பற்றி பேசுகையில், பிஎஸ்என்எல் ரூ 769 திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்கப்படுகிறது. மேலும் இந்த 2GB/day ஆனவுடன் வேகம் 40Kbps ஆக குறையும். அத்துடன் வரம்பற்ற அழைப்பு நன்மையும் இந்த ரீசார்ஜ் திட்டத்தில் நீங்கள் பெறுவீர்கள்.

இந்த திட்டத்தில் வேறு எண்ணென நன்மைகள் கிடைக்கும்?
பிஎஸ்என்எல் ட்யூன்ஸ், EROS Now, M/s ONE97 கம்யூனிகேஷன்ஸ் லிமிடட் வழங்கும் ஹார்டி மொபைல் கேம்ஸ் சர்வீஸ், M/s Onmobile Global Ltd வழங்கும் ப்ரோக்ரெசிவ் வெப் ஆப் (Progressive Web App(PWA))-ல் சேலஞ்சஸ் அரேனா மொபைல் கேமிங் சர்வீஸ், M/s Tellyfonic Digital Media வழங்கும் “Lystn” மியூசிக் சர்வீஸ், லோக்துன், ஜிங், ஆஸ்ட்ரோடெல், M/s Ubarri Marketing Private Limited வழங்கும் கேம்ஆன் சர்வீசஸ், M/sADVYSORS INC வழங்கும் GAMEIUM ப்ரீமியம் கேமிங் அப்ளிகேஷன் ஆகிய அம்சங்கள் கிடைக்கும். 

மேலே குறிப்பிடப்பட்டுள்ள ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் பெரும்பாலான தொலைத்தொடர்பு வட்டங்களில் கிடைக்கிறது. இருப்பினும், இந்தத் திட்டம் அனைத்து வட்டங்களிலும் கிடைக்காமல் போகலாம், இதை BSNL ஆப் அல்லது இணையதளத்தில் நீங்கள் சரிப்பார்க்கலாம்.

ரீசார்ஜ் எப்படி செய்வது
பிஎஸ்என்எல்: https://portal2.bsnl.in/myportal/quickrecharge.do . அனைத்து ஆப்ரேட்டர்களுக்கும் அவர்களது சொந்த ஆப் களும் உள்ளன. அவற்றைப் பயன்படுத்தி ரீசார்ஜ் செய்வது மிகவும் எளிதானது. Paytm, PhonePe, Google Pay அல்லது வேறு ஏதேனும் BHIM போன்றா UPI apps மூலமாகவும் ரீசார்ஜ் செய்யலாம்.

 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.