HBD Suriya: சூர்யாவின் வாழ்க்கையை ஒரே வார்த்தையில் மாற்றிய ரகுவரன்..இன்றுவரை மறக்காத சூர்யா..!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வரும் சூர்யா இன்று தனது 48 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றார். அவருக்கு பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் அவர் நடிப்பில் உருவாகி வரும் கங்குவா படத்தின் கிலிம்ஸ் வீடியோ அவரின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியுள்ளது.

ரசிகர்களின் பேராதரவை பெற்று யூடியூபில் பல சாதனைகளை கங்குவா கிலிம்ஸ் வீடியோ செய்து வருகின்றது. இந்நிலையில் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரை பற்றி பல தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன.

ரகுவரனின் அட்வைஸ்

மேலும் சூர்யாவின் பழைய பேட்டிகள் மற்றும் சூர்யாவை பற்றி பலர் பேசிய வீடியோக்கள் என அனைத்தையும் ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர். அந்த வகையில் சூர்யா நடிகர் ரகுவரனை பற்றி பேசிய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகின்றது. அதாவது நேருக்கு நேர் என்ற படத்தின் மூலம் அறிமுகமான சூர்யா பல விமர்சனங்களை சந்தித்தார்.

HBD Suriya: அவமானங்கள் முதல் தேசிய விருதுகள் வரை..சூர்யாவின் திரைப்பயணம் ஒரு பார்வை..!

சூர்யாவின் நடிப்பு, நடனம் பற்றி பல கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இருந்தாலும் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி பல படங்களில் நடித்து வந்தார் சூர்யா. அந்த வகையில் உயிரிலே கலந்து என்ற படத்தில் சூர்யா நடித்து வந்த போது அப்படத்தில் அவருடன் இணைந்து நடித்த ரகுவரன் கூறிய அறிவுரை தான் சூர்யாவின் திரைப்பயணத்தையே மாற்றியது என கூறியுள்ளார்.

என்னவென்றால், ஒரு நாள் படப்பிடிப்பு முடிவடைந்து சூர்யா தன் ரூமுக்கு சென்று தூங்கிவிட்டாராம். அப்போது அங்கெ வந்த ரகுவரன்,உனக்கு நிம்மதியா தூக்கம் வருதா ? அது எப்படி ஒரு விஷயத்தை சாதிக்காம உனக்கு தூக்கம் வரும். உனக்கு தனி ஒரு அடையாளத்தை உருவாக்கு. இப்பொது நீ சிவகுமாரின் மகன் சூர்யா தான். எனவே எதிர்காலத்தில் சூர்யாவின் அப்பா தான் சிவகுமார் என சொல்லும் அளவிற்கு தனி ஒரு அடையாளத்தை உருவாக்கு.

மாறிய சூர்யா

அதுவரை தூங்காதே என சூர்யாவிற்கு அட்வைஸ் செய்துள்ளார் ரகுவரன். அந்த ஒரு நொடி தான் சூர்யா தன்னை பற்றியும் ரகுவரன் சொன்னதை பற்றியும் யோசித்துள்ளார். அதில் இருந்து சூர்யாவின் மனநிலை முற்றிலும் மாறிவிட்டதாம். எனவே தான் இந்த நிலையை அடைய ரகுவரனின் அறிவுரை மிக முக்கிய காரணமாக அமைந்தது என சூர்யா ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்

இந்நிலையில் தொடர்ந்து போராடி வந்த சூர்யாவிற்கு பாலாவின் நந்தா படத்தின் மூலம் மிகப்பெரிய திருப்புமுனை ஏற்பட்டது. இதையடுத்து காக்க காக்க, பிதாமகன், கஜினி, அயன், ஆதவன் என தொடர்ந்து ஹிட் படங்களாக கொடுத்து இன்று இந்திய திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகின்றார் சூர்யா என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.