மும்பை: ஷாருக்கான் – அட்லீ கூட்டணியில் உருவாகும் ஜவான் திரைப்படம் செப்டம்பர் 7ம் தேதி வெளியாகவுள்ளது.
தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகும் இப்படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார்.
ஏற்கனவே இந்தி வெப் சீரிஸ்களில் நடித்து பாலிவுட் ரசிகர்களின் ஃபேவரைட் லிஸ்ட்டில் இடம்பிடித்துவிட்டார் விஜய் சேதுபதி.
இந்நிலையில், ஜவான் படத்தில் இருந்து விஜய் சேதுபதிக்கு ஹைப் கொடுக்கும் விதமாக போஸ்டர் வெளியாகியுள்ளது.
விஜய் சேதுபதிக்கு ஹைப் கொடுத்த ஜவான் டீம்:
ஷாருக்கான் நடித்த பதான் திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. அதனைத் தொடர்ந்து அவரது ஜவான் திரைப்படம் செப்டம்பர் 7ம் தேதி வெளியாகவுள்ளது. அட்லீ இயக்கியுள்ள இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஷாருக்கானுடன் நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். ஷாருக்கானுக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழில் மட்டுமே வில்லனாக மிரட்டி வந்த விஜய் சேதுபதி, இப்போது டோலிவுட், பாலிவுட்டிலும் மாஸ் காட்டத் தொடங்கிவிட்டார்.
ஃபார்ஸி வெப் சீரிஸ் மூலம் பாலிவுட் ரசிகர்களுக்கு வெரைட்டி காட்டியிருந்த விஜய் சேதுபதி, ஜவானில் ஷாருக்கானுக்கு வில்லனாக நடித்துள்ளது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்த விஜய் சேதுபதி, விக்ரமில் கமல்ஹாசனுக்கு எதிராகவும் கெத்து காட்டியிருந்தார். இதையெல்லாம் பார்த்து தான் ஜவானில் விஜய் சேதுபதியை வில்லனாக கமிட் செய்தாராம் ஷாருக்கான்.

ஜவானில் நடித்தது குறித்து விஜய் சேதுபதியும் கூறியிருந்தார். அதாவது பணத்துக்காக இந்தப் படத்தில் நடிக்கவில்லை, ஷாருக்கானுக்காக மட்டுமே கமிட்டானேன் எனத் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் விஜய் சேதுபதியின் இன்ட்ரோ போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் விஜய் சேதுபதியின் கண் மட்டும் இந்த போஸ்டரில் தெரிகிறது. வில்லனுக்கே உரிய மிரட்டலுடன் உருவாகியுள்ள இந்த போஸ்டர், விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு ஹைப் கொடுத்துள்ளது.
இதனால் ஜவான் படத்தில் இருந்து விஜய் சேதுபதியின் போஸ்டர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் அவருக்காக தனியாக டீசர் வெளியாகும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், ஜவான் படத்துக்காக விஜய் சேதுபதிக்கு 20 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.