எதிர்பார்ப்புதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா தற்போது சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் கங்குவா என்ற படத்தில் நடித்து வருகின்றார். தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைக்க பாலிவுட் திரையுலகில் பிரபலமான நாயகியாக வலம் வரும் திஷா பதானி இப்படத்தில் நாயகியாக நடிக்கின்றார். இதையடுத்து கங்குவா படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு துவங்கப்பட்டு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படத்தின் முதல் பாகம் அடுத்தாண்டு திரையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பும் இருந்து வருகின்றது
முதல்முறைசூர்யாவின் திரைப்பயணத்திலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகும் படம் என்றால் அது கங்குவா தான். பல மொழிகளில் பான் இந்திய படமாக உருவாகும் கங்குவா படத்தை மிகப்பிரமாண்டமாக தயாரித்து வருகின்றது ஞானவேல் ராஜா. ஸ்டூடியோ க்ரீன் சார்பாக ஞானவேல் ராஜா தயாரித்து வரும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கின்றது. என்னதான் சிறுத்தை சிவாவின் முந்தைய படமான அண்ணாத்த எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் இப்படத்தின் மூலம் மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கிலிம்ஸ்தற்போது சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு கங்குவா படத்தின் கிலிம்ஸ் வீடியோ வெளியானது. கிட்டத்தட்ட 2 நிமிடங்கள் ஓடும் அந்த கிலிம்ஸ் வீடியோ படத்தின் பிரம்மாண்டத்தை ரசிகர்களுக்கு உணர்த்தியது. சூர்யாவின் வித்யாசமான கெட்டப், படத்தின் விசுவல்ஸ் என அனைத்தும் இப்படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பை பலமடங்கு உயர்த்தியுள்ளது. நேற்று நள்ளிரவு வெளியான கங்குவா கிலிம்ஸ் யூடியூபில் அதிக பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்து வருகின்றது. சூர்யாவின் திரைவாழ்க்கையிலேயே மிக முக்கியமான படமாக கங்குவா இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது
கதை முதல் ரிலீஸ் வரைஇந்நிலையில் நேற்று கங்குவா படத்தின் கிலிம்ஸ் வீடியோ வெளியீட்டின் போது சிறுத்தை சிவா படத்தை பற்றி பல விஷயங்களை பேசியுள்ளார். அவர் கூறியதாவது, கங்குவா படம் மனித உணவர்வுகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படமாகும். மேலும் இப்படம் நிகழ்காலம் மற்றும் பீரியட் படமாக உருவாகியுள்ளது கிட்டத்தட்ட 1500 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற ஒரு சம்பவத்தை பற்றி பேசும் படமாக கங்குவா உருவாகிவருகிறது. குறிப்பாக இப்படத்தில் மிகப்பிரமாண்டமான போர் சண்டை காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் கங்குவா படத்தை பார்த்துவிட்டு அது எங்களுக்கு திருப்தி அளிக்கும் வகையில் இருந்தால் உடனடியாக படத்தை திரையில் வெளியிடுவோம். மேலும் கங்குவா படத்தை ஒரு தரமான படைப்பாக கொண்டுவருவதே எங்களின் நோக்கம் என பேசியுள்ளார் சிறுத்தை சிவா என்பது குறிப்பிடத்தக்கது