Korea Open Badminton: Indian pair Satwik-Chirag Champions | கொரிய ஓபன் பாட்மின்டன்: இந்திய ஜோடி ‛சாம்பியன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

இயோசு: கொரிய ஓபன் பாட்மின்டன் இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் – சிராக் ஷெட்டி ஜோடி சாம்பியன் பட்டத்தை வென்றது.

தென் கொரியாவில், ‘சூப்பர்-500’ அந்தஸ்து பெற்ற கொரிய ஓபன் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் ‘நம்பர்-3’ ஜோடி, இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி, ‘நம்பர்-2’ அந்தஸ்து பெற்ற சீனாவின் லியாங் வெய் கெங், வாங் சங் ஜோடியை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறியது.

இன்று (ஜூலை 23) நடைபெற்ற பைனலில் உலகின் ‛நம்பர்-1′ ஜோடியான இந்தோனேஷியாவின் பஜார் அல்பியான் – முகமது ரியன் அர்டியாண்டோ ஜோடியை எதிர்கொண்டது. முதல் செட்டில் 21-17 என வீழ்ந்த இந்திய ஜோடி, இரண்டாவது செட்டை 13-21 என கைப்பற்றியது. வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி செட்டில் இந்தியாவின் சாத்விக் – சிராக் ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 21-14 என கைப்பற்றியது.

இதன்மூலம் 21-17, 13-21, 14-21 என்ற செட் கணக்கில் வெற்றிப்பெற்று ‛சாம்பியன்’ பட்டத்தை இந்திய ஜோடி வென்று அசத்தியது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.