வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: இந்தியாவின் ஏற்றுமதி தடையைத் தொடர்ந்து, அமெரிக்காவில் அரசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் அரசி விலை உயர்ந்துள்ளது. இதனால் இனி விலை உயர்வு அதிகரிக்கும் என்பதால், கடை வீதிகளில் இந்தியர்கள் வரிசையில் நின்று, அளவுக்கு அதிகமாக வாங்கி சென்று ஸ்டாக் வைக்க முடிவு செய்துள்ளனர்.

கடந்த வாரம் பாஸ்மதி அல்லாத பச்சரிசி ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்ததுடன், அந்த தடை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அறிவித்தது. இதைத் தொடர்ந்து, உலக அரிசி சந்தையில், தாய்லாந்தும், வியட்னாமும் அரிசி விலையை, டன்னுக்கு 42,000 ரூபாய் வரை உயர்த்தி உள்ளன.
மேலும் உலக அரிசி சந்தையில், குறைந்தது 10 சதவீதம் வரை விலை உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வியட்னாமில் ஒரு டன் 42,230 ரூபாயாகவும்; மியான்மர், பாகிஸ்தானில் 41,000 ரூபாயாகவும் விலை உயர்ந்துள்ளது. இன்னும் ஒரு மாதத்திற்குள் இது 57,500 ரூபாய் வரை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்தியாவின் ஏற்றுமதி தடையைத் தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் கனடாவில் வசிக்கும் இந்தியர்கள் அரிசி வாங்குவதற்காக கடைகளுக்கு முன் வரிசைகட்டி நிற்கிறார்கள். விலை உயர்வு மற்றும் இந்தியாவில் இருந்து அரிசி இறக்குமதிக்கு நீண்ட காலம் ஆகும் என்ற அச்சத்தால், அதிகளவில் அரிசியை வாங்கி இருப்பு வைக்க இந்தியர்கள் முற்படுவதாக சமூக ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவில் பெரும்பாலான மகாணங்களில் அரசி விலை உயர்ந்தது. இந்தியா ஏற்றுமதி தடைக்கு முன், ரூ.1600க்கு விற்க்கப்பட்ட 10கிலோ அரிசி பை தற்போது, ரூ.2500க்கு விற்பனை செய்யப்படுகிறது. இருப்பினும் அமெரிக்காவில் சூப்பர் மார்க்கெட்டில் அரிசி விலை குறையவில்லை.
அதேபோல், ஆஸ்திரேலியாவிலும் அரிசி மார்கெட்டில் ஸ்டாக் இல்லையாம். மக்கள் அளவுக்கு அதிகமாக வாங்கி, இருப்பு வைப்பதால் விலையும் அதிகரித்து கொண்டே செல்கிறது. அரிசி ஏற்றுமதிக்கு விதித்த தடையை இந்தியா விலக்கும் வரை, இதே நிலைமை அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் நிலைமை தொடரும் எனக் கூறப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement