நியூயார்க்: டுவிட்டர் நிறுவனத்தின் பெயரை மாற்ற அதன் உரிமையாளர் எலான் மஸ்க் முடிவு செய்துள்ளார். டுவிட்டர் என்ற பெயருக்கு விரைவில் விடை கொடுக்கலாம் எனக்கூறியுள்ளார்.
டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்து எலான் மஸ்க் பல மாற்றங்களை செய்து வருகிறார். கடந்த ஏப்ரலில், லிண்டா யக்காரினோ என்பவரை சி.இ.ஓ., ஆக நியமித்தார். அப்போது அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: டுவிட்டரை வாங்குவது என்பது எக்ஸ் எனப்படும் செயலியை உருவாக்குவதற்கான நடவடிக்கையே. லிண்டா பதவியேற்றதும், இந்த எக்ஸ் என்ற பெயரை தனது மனதில் சில காலத்திற்கு முன்பிருந்து வைத்திருக்கிறேன்.
இந்த டுவிட்டர் தளம், எக்ஸ் என்ற செயலியாக உருமாற்றப்படும் பணியை லிண்டாவுடன் இணைந்து செயலாற்ற எதிர்பார்த்து இருக்கிறேன் எனக்கூறியிருந்தார்.
இந்நிலையில், டுவிட்டரில் அவர் வெளியிட்ட பதிவு ஒன்றில், டுவிட்டர் தளம் மறுசீரமைக்கப்படும். வர்த்தக டுவிட்டர் என்ற பெயருக்கு விரைவில் நாங்கள் விடை கொடுக்கலாம் எனக்கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement