புதுடில்லி: யமுனை நதியில் நீர்மட்டம் அதிகரித்து அபாய அளவை எட்டி வரும் நிலையில், டில்லிக்கு எந்த நேரத்திலும் பாதிப்பு ஏற்படலாம் என மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் டில்லி அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளது.
சில தினங்களுக்கு முன், டில்லி, ஹரியானா, உ.பி., உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை கொட்டியதால், யமுனையில் வெள்ளம் பெருக்கெடுத்து டில்லியில் பாதிப்பை ஏற்படுத்தியது. பிறகு படிப்படியாக யமுனையில் நீரின் அளவு குறைந்தது.
இந்நிலையில், வட மாநிலங்களில் கனமழை கொட்டி வருவதால், யமுனை நதியில் மீண்டும் இன்று(ஜூலை 23) காலை வெள்ளப்பெருக்கு 205.81 மீட்டர் அளவுக்கு உயர்ந்து அபாய அளவை கடந்தது.

இதனால், டில்லிக்கு எந்த நேரத்திலும் பாதிப்பு ஏற்படலாம் என மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. டில்லி அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement