அரசு பள்ளிகள் சொன்ன குட் நியூஸ்… ஒரே வருஷத்தில் 67 சதவீதம்… எகிறி அடிச்ச கர்நாடகா!

கர்நாடகா மாநிலத்தில் உள்ள சட்டமன்ற மேலவையில் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் துறை அமைச்சர் மது பங்காரப்பா முக்கியமான அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். அதில் 2018 – 19 மற்றும் 2022 – 23 ஆகிய கல்வியாண்டிற்கு இடையில் 57 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளிக்கு வராமல் பாதியில் நின்று விட்டனர். இந்த எண்ணிக்கை கடந்த கல்வியாண்டில் பெரிதும் முன்னேற்றம் கண்டுள்ளது.

கல்வியாண்டுஇடைநின்ற மாணவர்கள் எண்ணிக்கை2018 – 197,6052019 – 2017,2982020 – 218,4762021 – 2218,4612022 – 235,945
இடைநிற்றல் குறைந்தது

குறிப்பாக கடந்த கல்வியாண்டை எடுத்து கொண்டால் 5,945 பேர் மட்டுமே பள்ளியில் இருந்து பாதியில் நின்றுள்ளனர். இது முந்தைய கல்வியாண்டு உடன் ஒப்பிடுகையில் 67 சதவீதம் குறைவு என்பது ஆறுதல் அளிக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளில் மிகப்பெரிய இடைநிற்றல் எண்ணிக்கை என்று எடுத்து கொண்டால் அது 18,461 ஆகும்.

சட்டமன்றத்தில் அமைச்சர் தகவல்

இதுதொடர்பாக சட்டமன்றத்தில் பேசிய அமைச்சர் மது பங்காரப்பா, பள்ளிகளில் இருந்து மாணவர்கள் இடையில் நிற்பதற்கு இடம்பெயர்வு, குடும்ப பிரச்சினை, உடல்நலக் குறைபாடுகள், நோய்வாய்ப்படுதல், பெண்கள் பருவ வயதை அடைதல் உள்ளிட்டவை காரணங்களாக இருப்பதாக தெரிவித்தார். அதற்காக அப்படியே விட்டு விட முடியாது.

அனைவருக்கும் கல்வி

அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து மீண்டும் பள்ளியில் சேர்க்க ஏற்பாட்டை செய்ய வேண்டும். அனைவருக்கும் கல்வி உரிமை என்ற சட்டத்தின் கீழ் ஒவ்வொரு குழந்தையும் கல்வி கற்பதற்கு முழு உரிமை பெற்று காணப்படுகிறது. அதற்கு சரியான வாய்ப்புகளை ஏற்படுத்தி தர வேண்டியது அரசின் கடமை.

கர்நாடகாவில் குளறுபடி

ஆனால் கர்நாடகா மாநிலத்தில் அனைவருக்கும் கல்வி உரிமை சட்டத்தை சரியான முறையில் செயல்படுத்துவது இல்லை என்று கல்வியாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதில் மற்றொரு குளறுபடியும் இருப்பதாக கர்நாடகாவை சேர்ந்த கல்வியாளர் நிரஞ்சனராத்யா சுட்டிக் காட்டியுள்ளார். அதாவது, ஒவ்வொரு ஆண்டும் அரசு பள்ளியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே செல்கிறது.

உண்மை நிலவரம் என்ன?

ஆனால் இடைநின்ற பள்ளி மாணவர்களை சேர்ப்பதாக அரசு கூறும் தகவலின்படி பார்த்தால் மிகவும் அதிக மாணவர்கள் இருக்கின்றனர். இந்த எண்ணிக்கை ஒன்றுக்கு ஒன்று பொருந்தவில்லை. இதில் எது தவறு என்பது தெரியவில்லை. எனவே மாநில அரசு சரியான எண்ணிக்கையை சொன்னால் தான் உண்மை நிலவரம் தெரியவரும் என்று தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.